வணக்கம் நண்பர்களே!
உடலை நல்ல முறையில் நீங்கள் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிவருகிறேன். அதனை நீங்கள் கடைபிடித்து வருகின்றீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உடலை பொறுத்தவரை நல்ல உடல்வாகுவாேடு இருக்கவேண்டும் என்பது இல்லை. உடல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் அந்த உடலை வைத்துக்கொண்டு எந்தவித கவலைப்படாமல் இருக்கவேண்டும்.
ஆத்மாவுக்கு உடல் மீது அதிக ஆசைவருவது போல் இருக்கவேண்டும். உடலால் எந்தவித தொந்தரவும் இல்லை என்று ஆத்மா நினைக்கவேண்டும். ஒரு சிலருக்கு தொப்பை இருக்கும் அதனை பார்த்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.
தொப்பை இருப்பதால் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஆத்மா நினைத்தால் தொப்பை நினைத்து நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. அதாவது உங்களின் உடல் சுறுசுறுப்பாக இருந்தால் போதும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment