வணக்கம் நண்பர்களே!
முதலில் ஒரு நல்ல விசயத்தை பார்க்கலாம். மார்கழி மாத அம்மன் பூஜை ஐனவரி மாதம் பத்தாம் தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அம்மனின் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம்.
அம்மன் பூஜைக்கு இதுவரை நான் யாரையும் கூப்பிட்டதில்லை. அப்படி இருந்தும் பல நண்பர்கள் நமது அம்மன் பூஜைக்கு கலந்துக்கொண்டுள்ளனர். ஜாதககதம்பத்தை படித்துவிட்டு அதன் வழியாக வந்து கலந்துக்கொண்டுள்ளனர். அம்மன் பூஜைக்கு யாரையும் கூப்பிடாமல் இருந்தர்க்கு காரணம் எனக்கு அதிக வேலை இருக்கும். அடுத்தபடியாக இது கிராமம் இந்த ஊரில் வெளியூரில் இருந்து வந்து செல்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதும் கடினமாக உள்ளது.
அம்மன் பூஜை ஏற்பாடு செய்வதற்க்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே பூஜையை சிறப்பாக செய்யமுடியும். அம்மன் பூஜைக்கு மலர் வாங்குவது ஒரு சவாலாகவே இருக்கும். அதனை எடுத்து அலங்காரம் செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். காலையில் இருந்து வேலையை தொடங்கினாலும் தீபாராதனை காட்டுவதற்க்கு மாலை ஏழு மணியாகிவிடுகிறது.
அம்மன் பூஜைக்கு நேரில் நீங்கள் வந்து கலந்துக்கொள்வதாக இருந்தால் கலந்துக்கொள்ளலாம். இத்தனை நாள் கூப்பிடாமல் ஏன் இப்பொழுது கூப்பிடுகிறேன் என்று கேள்வி கேட்பவர்களுக்கு நான் சொல்லுவது வரும் நண்பர்களுக்கு அம்மன் பூஜையின் பொழுது அவர்களுக்கு சிறந்த முறையில் காப்பு கட்டப்படும். உடல்காப்பு கட்டப்படும். இதனைப்பற்றி நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன். சூட்சமசரீரத்தை காப்பாற்றுவதற்க்கு உடல்காப்பு பூஜை செய்யப்படும்.
அம்மன் பூஜைக்கு தகுந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள். சூட்சம சரீர பாதுகாப்பை நேரில் வந்து செய்துக்கொள்ளுங்கள். கலந்துக்கொள்ளும் நண்பர்கள் அம்மனை அலங்காரம் செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். எந்த வித கட்டுபாடும் கிடையாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment