வணக்கம் !
சனிதசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். சனிதசாவை பார்த்து பயப்படாதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது. அந்தளவுக்கு பயத்தோடு மக்கள் சனியை பார்ப்பதால் வந்தது அது. அந்தளவுக்கு பெரிய பாதிப்பை எல்லாம் எல்லோருக்கும் சனிபகவான் கொடுத்துவிடமாட்டார்.
உங்களின் சுயஜாதகத்தில் சனி பகவான் வலு குன்றி அமைந்தால் சனி தசா உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கும். பிரச்சினை என்றால் ஒரே பிரச்சினையாக இருக்காது. சனியால் உங்களுக்கு நல்லது செய்யமுடியாமல் இருப்பதால் சின்ன சின்ன பிரச்சினை ஏற்படும். உடல்நிலையில் பிரச்சினை ஏற்படும்.
வலுகுறைவாக அமைவது என்றால் உங்களுக்கு என்ன என்று தெரியும். மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் அதுவும் எட்டாவது வீட்டில் மட்டும் அமரும்பொழுது அதிகமாக வலு குறைந்துவிடும்.
செவ்வாயின் வீடான மேஷத்தில் சனி அமர்ந்தாலும் வலுகுறைந்து அமரும். நீசமாக சனி அமர்ந்துவிடுவதால் மேஷத்தில் சனி அமர்ந்து தசா நடந்தால் பெரிய பலனை எதிர்பார்க்கமுடியாது என்று சொல்லுவார்கள். நடைமுறையில் கூட அப்படி தான் பெரும்பாலான நபர்களுக்கு நடைபெறுகிறது.
பாவியாக சனி அமர்ந்தாலும் பிரச்சினையை அதிகம் கொடுப்பார் என்று சொல்லுவார்கள். ஒரு லக்கினத்திற்க்கு பாவி யார் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பாவியாக சனி அமர்ந்து சனி தசா நடந்தால் அதிகப்பட்சம் அந்த தசாவில் மரணத்தை தரும் என்று சொல்லுவார்கள்.
தீயகிரகங்களோடு சனி அமர்ந்து அதாவது செவ்வாய் கிரகத்தோடு சனி இணைந்து நின்று சனி தசா நடந்தால் அந்த தசாவிலும் அதிகம் நன்மையை செய்யாது.உங்களின் ஜாதகத்தில் எப்படி சனி அமர்ந்து இருக்கிறது என்பதை பொருத்து தான் சனி தசாவின் பலன் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment