Followers

Wednesday, February 25, 2015

முருகன் வழிபாடு


வணக்கம்!
          முருகன் வழிபாடு என்பது ஒரு பிரசித்திபெற்ற வழிபாடு இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு முருகனின் பெருமைப்பற்றி தெரியும்.பொதுவாக தமிழர்களின் குலதெய்வமாக பெருமையானவர்களுக்கு முருகன் தெய்வமாக இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட முருகனை குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வருவார்கள்.

முருகனின் கோவிலுக்கு நான் செல்லுவதே அவரின் அழகை தரிசனம் செய்வதற்க்கு மட்டுமே. அந்தளவுக்கு ஒரு அழகானவர். முருகன் என்றால் அழகு தானே.

தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை தோறும் முருகன் கோவில் சென்று வருபவர்கள் நமது பதிவில் கூட அதிக நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள முருகனின் அருள் மெய் சிலிர்க்க வைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் அதிகப்பட்சம் ஒன்பது செவ்வாய்கிழமையில் அதன் பலனை அனுபவித்துவிடுவார்கள். முருகனின் வழிப்பாட்டை இதுவரை கடைபிடிக்காத நண்பர்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை முருகனுக்கு கடைபிடித்து வாருங்கள்.

அடுத்த பதிவு மதியம் 1 மணியளவில்

திருப்பூர் பயணம் புறப்படுகிறேன். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

nallur parames said...

Variyaar swamigalai maanaaseega guruvaaga erppadhum muruga valhzipaduthaan.

Unknown said...

thank you so much for your information.and.if any proof your personal life about lord muruga"s grace and boon please regiter it.