வணக்கம் !
ஒவ்வொரு மனிதனும் இந்த காலத்தில் தனியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனிக்குடித்தனமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். பொருளாதார சூழ்நிலையால் இப்படி வாழவேண்டும் என்று ஆசைப்படலாம்.
கூட்டுக்குடும்பம் என்பது இன்று எந்த இடத்திலும் பார்ப்பது கடினம். திருமணம் முடிந்தபிறகு அனைவரும் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள. தனிக்குடித்தனம் போவது தவறு இல்லை ஆனால் பெற்ற தாய் தந்தையை விட்டு தனிக்குடித்தனம் போவது என்பது தான் கொடுமையான ஒரு செயல்.
இன்றைய காலத்தில் அண்ணன் தம்பி கூட ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வசிப்பதில்லை. நான் சொல்ல வந்த விசயத்திற்க்கு வருகிறேன். ஒருவர் தனிக்குடித்தனமாக வாழ்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு சனிதசா ஆரம்பித்தால் அந்த நபர் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ ஆரம்பித்துவிடுவார்.
சனி என்றால் வேலையாட்கள் காட்டும் கிரகம். வேலையாட்களை பார்த்தால் கூட்டாக வசிப்பார்கள். அதாவது அதிக நபர்கள் கொண்ட குடும்பங்களாக இருக்கும்.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் அதிகமக்கள் இருக்கின்றார்கள். இந்தியா மகரராசியை குறிக்கும் நாடு இந்தியா என்பார்கள். சனியின் ராசி என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
உங்களுக்கு சனி தசா நடந்தால் உங்களின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பமாக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.உங்களின் குடும்பம் கூட்டு குடும்பமாக இல்லாவிட்டாலும் நீங்கள் வசிக்கும் வீட்டில் அதிகபடியான நபர்கள் உள்ள குடும்பம் வாடகைக்கு இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
When I had sani dasa, I almost slowly went out of family, started living alone, sometimes isolated, then got married, lived in nuclear two ina family life. and then 3 but I'm still isolated from my family-particularly parents.
Post a Comment