வணக்கம்!
நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்ருந்தார். முதல் கேள்வியாக அதிகமாக கோவிலுக்கு செல்லுகிறீர்கள் அது எதனால்?
நமது ஜாதககதம்பத்தின் நண்பர்களை அழைத்துக்கொண்டு தான் கோவிலுக்கு செல்லுகிறேன். எத்தனை நாள் தான் பதிவில் மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நேரடியாக பல கோவில்களுக்கு செல்லும்பொழுது பல நல்ல விசயங்களை அவர்களுக்கு புகுத்த முடிகிறது.
நேற்றுக்கூட கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் என்னை அழைத்துக்கொண்டு ஆணைக்கட்டி மலைப்பகுதிக்கு சென்றார். அந்த இடங்களை பார்த்துவிட்டு மீண்டும் திருப்பூர் வந்தேன்.
ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது யாராவது ஒரு நண்பர் ஏற்பாட்டில் தான் சென்றுவருகிறேன். இதன் வழியாக உங்களுக்கும் தெரிவிப்பது என்ன என்றால் நீங்களும் கோவிலுக்கு செல்லும்பொழுது என்னை கூப்பிடுங்கள். அந்த நேரத்தில் ஒய்வாக இருந்தால் நான் வருகிறேன்.
பதிவில் சொல்லமுடியாத விசயங்களை அந்த ஆன்மீகப்பயணத்தில் பகிர்ந்துக்கொள்வதற்க்கு வாய்ப்பாக அமைகிறது. இனி அதிக பயணங்கள் இருக்கும். ஒரு சில நண்பர்களை நான் கூட வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கூப்பிடுவேன். அந்த நாளில் மொபைல் போனை சைலண்டில் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். அப்படியும் இருக்கின்றார்கள்.
ஜாதககதம்பத்தில் தொழில் நண்பர்கள் பெரும்பாலும் கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு அதிகம் ஏற்பாடு செய்து கூப்பிடுவார்கள். அவர்களோடு சென்று வருவது தான் அதிகம். ஒவ்வொரு பயணத்திலும் பல அற்புதவிசயங்கள் என்னோடு வருபவர்களுக்கு கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment