Followers

Thursday, February 26, 2015

சனி தசா பகுதி 5


வணக்கம் !
          சனிதசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். சனி தசா நடந்தால் பெரும்பாலும் சளி தொல்லையால் அவதிப்படுவது நேரிடும். சனி என்றாலே சளி தான் அதிகம் இருக்கும்.

சனிக்கிரகம் தான் நமது உடலில் உயிரை பிடித்து வைத்திருக்கிறது என்பார்கள். மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்யும்பொழுது கூட ஒருவருக்கு சளித்தொல்லை இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். சளித்தொல்லை இல்லை என்றால் விரைவில் குணமாகுவார் என்று சொல்லுவார்கள்.

சளித்தொல்லை உங்களுக்கு சனிதசாவில் ஏற்படும். சளித்தொல்லை தசா முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கும். சளித்தொல்லை இருந்தால் உங்களின் உடலைப்போட்டு உருக்கி எடுத்துவிடும். ஒருவருக்கு சனிதசா நடந்தது என்றால் அவரை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

பொதுவாக அனைவருக்கும் சளித்தொல்லை ஏற்படாது. பெருமான்மையானவருக்கு சளித்தொல்லை சனிதசாவில் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவு இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நீர்ராசியில் அமைந்தால் கண்டிப்பாக சளித்தொல்லை ஏற்படும். சளித்தொல்லைக்கு மற்றும் சனித்தொல்லைக்கு சூப் பரிகாரத்தைப்பற்றி பழைய பதிவில் சொல்லியுள்ளேன் அதனை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: