Followers

Friday, February 27, 2015

மூலிகை குளியல்


வணக்கம் !
          ஒவ்வொரு நாளும் நாம் பலரின் கண்ணில் படுகிறோம். அப்படி அவர்களின் கண்ணில் படும்பொழுது அவர்களின் பார்வை நம்மீது விழுகிறது. அவர்களின் பார்வை நல்ல பார்வையாக இருந்தால் நமக்கு நல்லது. பிறரின் பார்வை தீயபார்வையாக நம்மீது பட்டால் நமக்கு பிரச்சினை வரும். நமது சூட்சமசரீரம் கெடுகிறது.

சூட்சமசரீரத்தை பாதுகாக்க நான் பல்வேறு கருத்துகளை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து பல்வேறு கருத்துகளை நாம் பார்த்து வருகிறோம். 

சூட்சம சரீரம் கெட்டால் நல்ல உடல்வலி மற்றும் தலைவலி நமக்கு ஏற்படும்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதை பார்க்கலாம். ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அந்த தண்ணீருக்குள் வேப்பிலை ஆடாதொடா இலை நொச்சி இலை ஆர் எஸ் பதி இலை போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குளியுங்கள்.

நான் சொன்ன இலைகள் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு இலை கிடைத்தால் கூட போதுமானது. அதனை மட்டும் சுடுதண்ணீரில் போட்டு குளிக்கலாம். வேப்பிலை பரவலாக கிடைக்ககூடிய இலை தான் அதனை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

நான் வாரம் ஒரு முறை இந்த குளியலை குளிப்பது உண்டு. கிராமத்தில் அனைத்து இலைகளும் கிடைப்பதால் நான் குளிப்பது உண்டு. சுக்கிரனுக்கு மூலிகை குளியலைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அதற்கு கூட இந்த குளியலை செய்யலாம். இந்த குளியலை குழந்தைகளுக்கு கூட நீங்கள் செய்யலாம். வாரம் ஒரு முறை இந்த குளியலை குடும்பத்தோடு செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: