Followers

Friday, May 11, 2018

மலமாதம்


வணக்கம்!
          வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் அதில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம் என்று சொல்லுவார்கள். அதாவது ஒரு தமிழ்மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் அது மலமாதம் என்பார்கள்.

இரண்டு அமாவாசை வரும்பொழுது அதில் பரிகாரங்கள் வழிபாடுகள் மற்றும் வழக்கமாக நடைபெறும் கோவில் பூஜைகள் எது எல்லாம் செய்யலாம். சுபகாரியங்கள் என்று சொல்லப்படும் திருமணம் காதுகுத்து சடங்கள் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.

வைகாசி மாதத்தில் ஒரு சிலர் திருமணமும் வைத்திருக்கின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் திருமணம் வைகாசி மாதத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் கேட்டதற்க்கு திருமண மண்டபம் அப்பொழுது கிடைத்தது அதனால் வைத்தேன் என்றார். இவர்க்காக திருமணம் செய்யவில்லை மண்டபம் கிடைத்தற்க்காக திருமணம் செய்துஇருக்கிறார்.

வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் என்ற ஒரு விஷேசமான நாள் இருக்கின்றது. இது கோவில் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருப்பதால் அதனை செய்யலாம் ஆனால் கோவிலில் காதுகுத்துவது அல்லது கோவிலில் ஏதாவது ஒரு விஷேசத்தை உங்களின் குடும்பம் சம்பந்தமாக வைப்பது எல்லாம் வேண்டாம்.

பரிகாரம் இந்த மாதத்தில் செய்வதற்க்கு பரிந்துரை செய்வது உண்டு. பரிகாரம் என்பது சுபநிகழ்வு கிடையாது. அது ஒரு களிப்புபோல இருப்பதால் அதனை எல்லாம் நீங்கள் செய்யலாம். ஒரு சிலர் வைகாசி மாதத்தில் தோஷம் கிடையாது. தமிழ்நாட்டிற்க்கு இந்த தோஷம் கிடையாது என்பார்கள். 

ஒன்று தெரிந்த பிறகு அதில் ஏன் நாம் சந்தேகப்பட்டுக்கொண்டு நிகழ்ச்சியை வைக்கவேண்டும். ஒரு மாதகாலத்திற்க்கு பிறகு வைத்துக்கொள்ளுங்கள். தெரிந்தே தவறு என்பதை செய்யக்கூடாது. என்னுடைய கணிப்பு படி இந்த மாதத்தில் சுபகாரியங்கள் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். அதற்கு பிறகு உங்களின் இஷ்டம் போல் செய்யுங்கள்.

சோதிடர்களை பொருத்தவரை செய்யுங்கள் ஒன்று பாதிப்பு வராது என்று சொல்லிவிடுவார்கள். கஷ்டபடுவது நீங்களாக இருக்கும். என்னிடம் கேட்டவர்களுக்கு நான் இந்த மாதத்தில் குறித்துக்கொடுக்கவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

ஐயா

குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?