வணக்கம்!
ஒரு சாதாரணமான நபர் சாதிப்பதை விட ஒரு ஆன்மீகவாதி சாதிப்பது எளிதாக இருக்கும் விரைவாகவும் இருக்கும். இதற்கு அவர்களிடம் உள்ள சக்தி என்று சொன்னாலும் இதில் விசயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதனைப்பற்றி பார்க்கலாம்.
சாதாரணமானவர்கள் செட்டில் ஆகவேண்டும் என்றால் போராடி அதனை அடையவேண்டும். ஆன்மீகவாதி உடனே அந்த இலக்கை அடைந்துவிடுவார்கள். ஆன்மீகவாதிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றால் அவர்கள் இலக்கு என்பது தொலைதூரமாகவும் இருக்கின்றது. விரைவில் சம்பாதித்துவிட்டு ஞானம் அடைய என்ன வழி என்பதற்க்காக அந்த தேடுதலை துவங்கவேண்டும் என்ற ஒரு நோக்கம் இருக்கும்.
விரைவில் சம்பாதித்து அவர்களுக்கு வேண்டியதை பெற்றுவிட்டு அதன்பிறகு ஞானத்திற்க்கு காலத்தை செலவிடலாம் என்ற நோக்கத்திற்க்காக விரைவில் அவர்களுக்கு கிடைக்கும். சாதாரணமானவர்களுக்கு இலக்கு என்பது இருக்காது. ஒரே வழி சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே இருக்கும்.
நான் ஞானம் அடையபோகிறேன் என்னை சார்ந்து இருப்பவர்களுக்கு நான் பொருள் உதவியை செய்துமுடித்துவிட்டு நான் ஞானத்தை நோக்கி செல்லவேண்டும் என்று ஒரு எண்ணத்தை உருவாக்கினால் உங்களுக்கு செல்வம் எல்லாம் வந்து சேரும். அதன்பிறகு நீங்கள் ஞானமார்க்கத்தை நோக்கி செல்லலாம்.
உங்களின் எண்ணம் உண்மையானதாக இருந்தால் மட்டுமே இது எல்லாம் நடக்கும். உங்களின் எண்ணம் இதனை செய்துவிட்டு ஜாலியாக அப்படியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணினால் ஒன்றுமே வராது. உண்மையாக இருந்தால் மட்டுமே உங்களை நாடி வரும். ஆன்மீகவாதிகள் எளிமையாக அனைத்தும் பெறுவதின் இரகசியமே இதில் தான் இருக்கின்றன.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
நண்றி அய்யா
Post a Comment