வணக்கம்!
இன்று காலையில் நான்கு சிவஸ்தலங்களுக்கு சென்றேன். திரு சிவஸ்தலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்களை எனது வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இந்த கோவில்களைப்பற்றி தங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று தான் இந்த பதிவு.
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் திருவையாறுக்கு முன்னால் கண்டியூர் என்ற ஒரு ஊர் இருக்கின்றது. திருகண்டியூர் தற்பொழுது கண்டியூர் என்ற பெயரில் இருக்கின்றது. இங்கு பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் இருக்கின்றது. இந்த தலத்திற்க்கு தான் முதலில் நான் சென்றேன். அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம். அட்டவீரட்டஸ்தலத்தில் முதன்மையானது என்று சொல்லுகின்றனர். சூரியன் இருமனைவியோரோடு இருக்கின்றார். பிரமனுக்கு தனிசந்நதி இருக்கின்றது.
பிரமஹத்தி தோஷம் நீங்கும் ஸ்தலம் என்று சொல்லுகின்றனர். பிரம்மனின் சந்நிதியில் ஜாதகத்தை வைத்து இங்கு வழிபடுகின்றனர். நான் சென்றபொழுது ஐந்து நபருக்கு இங்குள்ள பிரம்மனின் சந்நதியில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்துக்கொண்டு இருந்தனர். பிரம்மன் அழகாக இங்கு இருக்கின்றார். தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் 12 என்று சொல்லுகின்றனர். மொத்தத்தில் இந்த கோவிலில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வழிபட்டனர். இந்த தலத்தில் மனிதன் சென்று வருவதற்க்கே புண்ணியம் செய்து இருக்கவேண்டும். புண்ணியம் இருந்தால் தான் இங்கு சென்று வழிபடலாம். இந்த மாதிரியான கோவில் கிடைப்பது எல்லாம் பெரிய விசயம் அல்லவா.
ஜாதககதம்பத்தில் இருப்பவர்கள் ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்ளும்பொழுது இந்த தலத்திற்க்கு சென்று வாருங்கள். நமக்கு நல்ல புண்ணியம் இருக்கின்றது நாம் செய்ய வேண்டியது நாம் இந்த ஊரை தேர்ந்தெடுத்து இங்கு சென்று வரவேண்டும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு உள்ள கோவிலை தரிசனம் செய்யவேண்டிய பாக்கியம் இருந்தால் இந்த கோவிலுக்கு செல்லலாம். இந்த கோவிலை முடித்துக்கொண்டு வெளியில் வந்தேன் அங்கு இருந்து மூன்று கிமீ தூரத்தில் இருக்கும் திருச்சோற்றுதுறை சென்றேன்.
திருச்சோற்றுத்துறை
இந்த ஸ்தலத்தில் உள்ள சிவனை வழிபட்டால் உணவு தருவான் என்பதால் திருச்சோற்றுத்துறை எனப்பட்டது. திருச்சோற்றுத்துறை என்பது பிறவிபிணி தீர இறைவன் வீடு பெறு தருவான் என்று சொல்லுகின்றனர். மூலவர்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
உற்சவர்: தொலையாச் செல்வர் தாயார்: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை. அப்பர் சுந்தரர் சம்பந்தர் மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
மிக அமைதியான ஊரில் நீங்கள் சென்றால் அமைதியாக கோவிலை தரிசனம் செய்யலாம். நான் சாமி தரிசனம் செய்யும்பொழுது நான்கு பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். பழமையான கோவில் என்பதால் மிக அருமையாக இருக்கின்றது. பழமையாக இருக்கும் கோவிலை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் இங்கு சென்று தரிசனம் செய்யலாம். தேவாரப்பாடல் பெற்ற 13 ஸ்தலமாகும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment