Followers

Tuesday, December 3, 2019

சித்தர்கள் பகுதி 2


வணக்கம்!
         சித்தர்கள் பற்றிய எழுதிய பதிவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பதினேட்டு சித்தர்களோடு முடிந்து போனதற்க்கும் நமது மக்களும் காரணமாக இருக்கலாம். தற்சமயம் சித்தர்கள் என்றாலே தலை தெரிக்க ஓடி ஒழிவதற்க்கும் தற்கால சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் மனிதர்களாலும் இது நடந்து இருக்கின்றது என்று சொல்லலாம்.

சித்தர்கள் என்றவுடன் பதினேட்டு சித்தர்களோடு உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவதால் தற்காலத்தில் பல நல்ல விசயங்கள் கிடைக்காமல் சென்றது என்று சொல்லலாம். உங்களிடம் நான் அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பதும் இந்த காரணங்களால் மட்டுமே சொல்லுகிறேன். ஒரு தாய் தன்னுடைய கருவை சுமக்கும் நபர் போலவே நீங்கள் செயல்படவேண்டும்.

நல்ல விசங்களை மட்டும் நீங்கள் வாங்கி உங்களை உருவாக்கவேண்டும். எதனோடும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளகூடாது. அடையாளப்படுத்தினால் உங்களின் வளர்ச்சி தடைப்பட்டு விடும். ஒரு ஆறு மாத காலம் அடுத்தவர்களிடம் வாங்கிக்கொண்டு ஆறு மாத காலம் சென்ற பிறகு நீங்கள் அதனோடு அடையாளபடுத்திக்கொள்ள நேரிடும். இதனை எல்லாம் நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.

அகத்தியர் சொன்னதை நீங்கள் கேட்கலாம் ஆனால் நீங்கள் அகத்தியர் கிடையாது. உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். போகர் சொன்னதை நீங்கள் உள்வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் அவர் தான் நீங்கள் என்று சொல்லிக்கொண்டு திரியகூடாது. ஏன் என்றால் இப்படி தெரிந்தவர்கள் எல்லாம் வீணாக போய்விட்டார்கள். நீங்களும் அப்படி சென்றுவிடகூடாது.

இன்று நம்முடைய ஜாதக கதம்பத்தில் நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்று ஆன்மீக தேனை பருகுகின்றனர். காசிக்கு செல்கிறேன் இமயமலை செல்கிறேன் அல்லது ஏதோ ஒரு புண்ணிய ஸ்தலத்திற்க்கு செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு செல்கின்றார். இவர்களை நல்ல மனதோடு அவர்களை சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறேன். 

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் உங்களின் வளர்ச்சி ஆன்மீகத்தை நோக்கி இருக்கவேண்டும் அதே நேரத்தில் எதனோடும் உங்களை இணைத்துக்கொள்ளகூடாது என்பதனை சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன். அடுத்தவர்களின் வளர்ச்சி தடைப்படகூடாது அவர்கள் நன்றாகவே வளர்வார்கள். நான் ஒரு எல்லைவரை செல்லமுடியும் அடுத்த எல்லையை நமது ஜாதககதம்ப நண்பர்கள் சென்று அதனைப்பற்றி சொல்லும் காலமும் வரும். இப்படி இருந்தால் மட்டுமே ஆன்மீகத்தை உங்களுக்குள் வளர்க்கமுடியும்.

நான் உங்களை கட்டுபாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தால் அனைத்தும் வீணாக போய்விடும்.நீங்களும் வளரவே மாட்டீர்கள். ஒருத்தரை ஒருத்தர் பேசிக்கொண்டும் திட்டிக்கொண்டும் சென்றுக்கொண்டு இருப்பீர்கள். இதனை அனைத்தும் சொல்லுவதற்க்கு காரணம் வளர்ச்சி மட்டுமே நடக்கவேண்டும். அகத்தியர் நான் தான் என்று சொல்லகூடாது. நானும் நான் தான் அகத்தியர் என்றும் சொல்லமாட்டேன்.

நீங்கள் எங்கு சென்றாலும் சரி அடுத்தவர்கள் சொல்லுவதை வாங்கி உங்களின் எப்படி வளர்க்கமுடியும் என்பதை மட்டும் சிந்தனை செய்யவேண்டும். அவர்கள் போல் நானும் என்றும் அகந்தை வேண்டாம். சித்தர்கள் உங்களில் மாற்றம் நடக்கவேண்டும் என்பதை தான் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் பெயரை வைத்துக்கொள்ள உங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை என்பதை மட்டும் நினைவில் முதலில் வையுங்கள். நிறைய விசயங்கள் உங்களை தேடி வர இருக்கின்றது.

மனது மிகப்பெரிய தந்திரசாலி நீங்கள் எதனோடு தொடர்பில் இருக்கின்றீர்களோ அதனோடு தொடர்பை வைத்துக்கொண்டு அதுபோலவே ஆட ஆரம்பித்துவிடும். போகர் என்று சொல்லிக்கொள்வதற்க்கும் அவர் அவர்களின் மனதே காரணமாக இருக்கின்றது. உங்களின் மனதை நீங்கள் வென்றால் மட்டுமே சித்தம் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: