Followers

Monday, December 23, 2019

சிறப்பு கட்டண பதிவு 2


வணக்கம்!
          இந்த காலத்தில் பணம் என்பது மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. ஒருவர் இன்றைய காலத்தில் வாழவேண்டும் என்றாலே அதற்க்கு பணம் என்பது காற்று போல தேவைப்படுகின்றது. இத்தகைய பணம் சம்பாதிப்பதில் தான் பலர் செயல்படுகின்றனர். என்னுடைய குரு சொன்ன விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆன்மீகப்பயிற்சி எல்லாம் செய் ஆனால் உன்னுடைய தேவைக்கு தேவையான பணத்தையும் சம்பாதித்துக்கொள் என்றார்.

நான் ஆன்மீகவாதி என்று சொல்லி ஒரு டீ கடையில் கூட டீயை இலவசமாக கொடுக்கமாட்டார்கள். பணம் கொடுத்தால் தான் டீயை கொடுப்பார்கள். ஆன்மீகவாதி என்று ஒருவரிடம் சொல்லி ஒரு காரியத்தை எல்லாம் சாதிக்கமுடியாது அதனால் உன்னுடைய தேவைக்கு பணத்தை நீ சம்பாதித்துக்கொள் என்று சொல்லிருந்தார். எதார்த்த வாழ்க்கைக்கும் இது ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கும்.

நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் விசயத்தில் நாம் ஈடுபட்டால் செயலை செய்தால் தான் நமக்கு பணம் என்பது கிடைக்கும். செயல் என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்தினாலே அந்த இடத்தில் கர்மா என்பது வந்துவிடும். உங்களிடம் இருந்து எந்த ஒரு செயல் நடைபெற்றாலும் அது கர்மாவை சார்ந்துவிடும்.

கர்மா என்ற ஒன்று வந்தால் அது நமக்கு பாவம் புண்ணியம் என்ற கணக்கு வரும். செயலை செய்யாமல் இருக்கமுடியாது. கர்மாவில் நல்ல கர்மா அல்லது கெட்ட கர்மா என்று சொல்லுவார்கள் அல்லவா. நல்ல செயலை செய்யும்பொழுது அது நல்ல கர்மா என்று சொல்லுவார்கள் கெட்ட செயலை செய்யும்பொழுது அது கெட்டகர்மா என்று சொல்லுவார்கள். இதனைப்பற்றி பிறகு பார்க்கலாம்.

நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்றாலே அது கர்மா என்ற ஒன்று வந்துவிடும். கர்மா இல்லாமல் சம்பாதிக்கமுடியும் என்பது மிக கடினமான ஒரு விசயமாகவே இருக்கும். இந்த உலகத்தில் ஆன்மீகவாதியாகவும் இருக்க வேண்டும் சம்பாதிக்கவும் வேண்டும் இது எப்படி நடக்கும்?

இதனைப்பற்றியும் நாம் கட்டணசேவையில் நிறைய பார்க்க இருக்கிறோம். உடனே இணைந்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

சிறப்பு கட்டண பதிவில் சேருபவர்கள் கட்டணத்தை செலுத்துங்கள். முதலில் இந்த கட்டண பதிவில் சேரும் நபர்கள் தங்களின் பெயரை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பிவிடுங்கள். ஒரு சிலர் அடுத்தமாதம் செலுத்துகிறேன் என்றனர் அவர்கள் அடுத்த மாதம் செலுத்தலாம். இதில் சேரும் நபர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிடுங்கள். முன்பதிவு என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் இதனை கேட்கிறேன்.  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: