வணக்கம்!
திருமண தடையைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமண தடையில் இந்த பதிவில் இராகு கேதுவைப்பற்றி பார்க்கலாம். செவ்வாய் தோஷத்திற்க்கு பிறகு இராகு கேது தோஷமும் பெரியதாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் தோஷம் போல இராகு கேது தோஷத்திற்க்கு அதிக பவர் மக்கள் கொடுத்து இருக்கின்றனர்.
இராகு கேது லக்கனத்தில் அல்லது இரண்டாவது வீட்டில் இருந்தால் இராகு கேது தோஷத்தை பெரியதாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு சிலர் ஐந்தில் இருந்தாலும் இராகு கேதுவை எடுத்துக்கொள்வார்கள். இதனை இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொண்டால் பாேதுமானது.
இராகு கேது மூன்றில் மற்றும் ஒன்பதில் அமரும் பொழுது அது பெரிய பிரச்சினையை கொடுக்கும். ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடைபெறாது. நாற்பது வயதில் திருமண பேச்சை எடுப்பார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு திருமணம் முடிந்து விவாகாரத்து ஆன பெண்களை திருமணம் செய்யக்கூடிய அமைப்பு இருக்கும்.
ஒரு சிலருக்கு இராகு கேது காலசர்ப்ப தோஷமாக அமைந்தால் இன்னமும் சிக்கல் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது போராட்டமாகவே நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்க்கு பெரிய சிக்கல் வந்துக்கொண்டே இருக்கும். பல வரன் கைவிட்டு சென்றுக்கொண்டே இருக்கும். இதனையும் இராகு கேது தோஷத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
இராகு கேது தோஷத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தை இராகு கேதுவோடு உள்ள வரனை பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்பார்கள். கூடுமானவரை இராகு கேது தோஷத்தில் உள்ள ஜாதகத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். பெரிய பரிகாரம் எல்லாம் செய்து இருக்கலாம் அதனோடு நமது ஜாதககதம்பத்தில் உள்ள பரிகாரத்தையும் இணைந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment