வணக்கம்!
திருசோற்றுதுறையை தரிசனம் முடித்து அடுத்ததாக திருவேதிகுடி சென்றேன். திருவேதிக்குடி வேதபுரீசுவரர் அப்பர் சம்பந்தவர் பாடல் பெற்ற ஸ்தலம். மூலவர் வேதபுரீசுவரர் மற்றும் வாழைமடுநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். தாயார் மங்கையர்கரசி என்றும் அழைக்கபடுகின்றார்.
தற்பொழுது இந்த திருத்தலம் திருமணத்தடைக்கு பரிகாரம் செய்வதற்க்கு இந்த தலத்தை வழிபடுகின்றனர். நான் பார்த்த பொழுது ஒரு சிலர் திருமணத்தடைக்கு பரிகாரம் செய்தனர். பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் நாம் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம்.
திருப்பூந்துருத்தி
இந்த தலத்தை முடித்துவிட்டு திருப்பூந்துருத்தி சென்றேன். திருப்பூந்துருத்தி இறைவன் பெயர் புஷ்பனேஷ்வரர். தாயார் செளந்தரநாயகி என்று அழைக்கபடுகின்றார். கோவிலுக்குள் சென்றவுடன் 13 தீர்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள நீரை எடுத்து நமது தலைக்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு சுவாமியை தரிசனம் செய்யவேண்டும். பாடியவர்கள் அப்பர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள். மிகவும் அருமையான ஒரு கோவில். நேற்று நான்கு கோவிலையும் பகல் 12 மணிக்குள் தரிசனம் முடித்தேன்.
நான் பைக்கில் சென்று தரிசனத்தை செய்தேன். கண்டியூர் இறங்கி ஆட்டோவில் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். பகல் 12 மணிக்குள் தரிசனம் செய்துவிடுவது நல்லது அதன்பிறகு கோவில் நடை சாத்திவிடுகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானம் என்று அழைக்கப்படும் காேவிலில் ஏழு கோவில் உள்ளது. ஒரே நாளில் நான் நான்கு கோவிலை தரிசனம் செய்தேன். மீதி இருக்கும் கோவிலை வேறு ஒரு நாளில் தரிசனம் செய்யவேண்டும் என்று இருக்கிறேன். நீங்களும் இந்த கோவிலை தரிசனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment