வணக்கம்!
குரு என்பவர் தன்னுடைய தத்துவத்தை மட்டும் கொடுத்தால் அது குருவிற்க்குரிய இலக்கணமாக இருக்காது. குரு என்பது தன்னுடைய உணர்வை அப்படியே சீடனுக்கு கடத்தகூடியவர்களாக இருப்பார்கள்.
நான் பல பேர்களிடம் பார்த்து இருக்கிறேன். அவர்கள் என்னிடம் சொல்லுவார்கள் அவர் எழுதிய புத்தகத்தை படித்து இருக்கிறேன். அவர் சொன்னது தான் என் வாழ்வில் கடைபிடிக்கிறேன் என்பார்கள். அவரை தான் நான் குருவாக தேர்ந்தெடுத்தேன் என்பார்கள்.
உண்மையில் தத்துவத்தை கொடுப்பது மூளையாகவே இருக்கும் அது உங்களை எந்தளவுக்கும் உயர்த்தவே உயர்ததாது. தத்துவங்கள் அனைத்தும் ஒரு நாள் நீங்கள் மீறி வேலை செய்யவேண்டியிருக்கும். அனைத்து தத்துவங்களும் மனித மூளையில் இருந்து உருவாகுவது மட்டுமே.
தத்துவங்கள் வேண்டாம் என்றால் அப்பொழுது பகவத்கீதை மற்றும் பைபிள் எல்லாம் தேவையற்றை என்பது போலவே ஆகிவிடும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் இது எப்பொழுது தேவைப்படும் என்றால் உங்களின் குரு உங்களிடம் ஒரு உணர்வை கொடுத்த பிறகு மட்டுமே இது அனைத்தும் வேலை செய்யும்.
குரு என்பவர் உங்களிடம் ஏதோ ஒரு மாற்றத்தை கொடுத்தால் அவரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதாவது உங்களின் உடலில் அந்த மாற்றத்தை கொடுப்பார். இது மட்டுமே உண்மையான குருவால் உங்களுக்கு கொடுக்கமுடியும். அவரை மட்டும் குருவாக தேர்ந்தெடுங்கள் அதன் பிறகு தத்துவங்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
திருமண பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு எல்லாம் இன்று பார்த்து சொல்லிவிடுகிறேன். விரைவில் அதற்கு என்று ஏற்பாடு செய்ய இருப்பதால் உடனே கட்டணத்தை செலுத்தி வையுங்கள். ஜாதகத்தை அனுப்பாதவர்களும் உடனே திருமண தடைக்கு பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment