வணக்கம்!
ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருப்பது காமம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபட்டவுடன் இது பெரிய அளவில் பிரச்சினையை கிளப்பிவிடும். காமத்தின் வேகம் அதிகரிக்க தொடங்கிவிடும். இதனை சரி செய்துக்கொண்டு ஆன்மீகத்தில் மேலே வருவது ஒரு போராட்டமாகவே இருக்கின்றது.
பல சாமியார்கள் வீணாக போவதற்க்கும் இது தான் பிரச்சினையாகவே இருக்கின்றது. ஆன்மீகத்தில் ஈடுபடுவர்கள் பலர் இளைய வயதில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் இவர்களுக்கு இன்னமும் அதிகமாகவே இருக்கின்றன. பல இளைஞர்கள் என்னிடம் இதனை தெரிவித்து இருக்கின்றனர். காமத்தை சமாளிக்கும் விதத்தை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டு இருக்கின்றனர்.
பலருடைய ஆன்மீக தாகம் சரியாகவே இருக்கின்றது. ஆன்மீகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்றனர். காமம் ஒரு இடையூறாகவே கருதுகின்றனர். என்னால் முடிந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் சரி செய்யும் விதத்தை சொல்லி கொடுத்து இருக்கிறேன். இன்னமும் பல கருத்துக்களை இதில் வைக்கவேண்டும்.
ஒரு சிலர் தியானத்தில் ஈடுபட்டால் காமத்தின் வேகம் குறைந்துவிடும் என்பார்கள். இது அனைவருக்கும் நடைபெறும் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு சிலருக்கு இது நடக்கும் பலருக்கு நடக்காமல் இது சென்றுவிடும். நீங்கள் தியானத்தில் ஈடுபட்டு இது குறைகின்றது என்றால் இதனை செய்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு உடலுக்கும் தகுந்தமாதிரியாகவே இதனை வேகம் இருக்கும் அதனையும் நாம் பார்த்த சரி செய்யவேண்டும்.
ஆன்மீகத்தில் ஈடுபடும் நமது நண்பர்களுக்கு நமது ஆசி இருக்கும் இதனை வைத்து நீங்கள் சரியான இலக்கை நோக்கி நடக்கமுடியும். உங்களின் உடலையும் சரி செய்யும் ஒரு சில பயிற்சிகளையும் நாம் கட்டண பதிவில் சொல்ல இருக்கிறோம். உடனே கட்டண பதிவில் சேர்ந்துக்கொள்ளுங்கள்.
கட்டண பதிவில் சேர முடியாத நண்பர்கள் தங்களின் ஆன்மீக பயணத்தை நிறைய கோவிலுக்கு சென்று வாருங்கள். என்னோடு கோவிலுக்கு வரவேண்டும் என்று இருப்பவர்களுக்கும் என்னை தொடர்புக்கொண்டு அதற்குரிய ஏற்பாட்டை ஏற்படுத்தி சென்று வரலாம்.
கட்டண பதிவில் சேர முடியாத நண்பர்கள் தங்களின் ஆன்மீக பயணத்தை நிறைய கோவிலுக்கு சென்று வாருங்கள். என்னோடு கோவிலுக்கு வரவேண்டும் என்று இருப்பவர்களுக்கும் என்னை தொடர்புக்கொண்டு அதற்குரிய ஏற்பாட்டை ஏற்படுத்தி சென்று வரலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment