வணக்கம்!
திருமணம் என்றாலே செவ்வாய் தோஷம்
என்பதை தான் முதலில் எடுப்பார்கள்.
திருமணத்தில் ஜாதகத்தை பார்ப்பதற்க்கே செவ்வாய் தோஷம் தான் காரணமாக
இருந்தன. தற்பொழுது கொஞ்சம் இந்த விசயம் மறைய
தொடங்கியுள்ளன என்று பலரிடம் பார்த்ததில்
தெரிகின்றன.
திருமணத்தில்
செவ்வாய் தோஷம் மிக மிக
முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் ஏழு மற்றும் எட்டாவது
வீட்டில் இருந்தால் அதிகபட்சமாக செவ்வாய் தோஷமாக கருதப்படுகின்றது. செவ்வாய்
தோஷத்தை பார்ப்பதற்கே பல விதிகள் இருக்கின்றன
அனைத்தையும் நாம் பார்க்க முடியாது.
குறைந்தபட்சமான தகவல்களை வைத்துக்கொண்டு முடிவு செய்யலாம்.
பொதுவாக
பார்த்த விசயத்தில் ஒன்று அல்லது இரண்டாவது
இடத்தில் இருந்தாலும் இதனை தோஷமாக நாம்
எடுத்துக்கொள்ளலாம். மேலே சொன்னது மற்றும்
மறைவுஸ்தானமான விரைய வீட்டில் உள்ள
செவ்வாயாக இருந்தாலும் அதனை தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
செவ்வாய்
கிரகம் இருக்கும் நபர் ஒன்று கோபமாக
இருப்பார்கள் அல்லது காமத்தில் அதிகபடியான
எண்ணம் உடையவராக இருப்பார்கள். இதனை சரி செய்யவே
செவ்வாய் தோஷத்தோடு அந்த ஜாதகத்தை இணைப்பார்கள்.
செவ்வாய்
தோஷத்திற்க்கு விரத முறைகள் எல்லாம்
இருந்தாலும் அதனை எல்லாம் பின்பற்றி
வந்து இருப்பீர்கள். இத்தனை முறைகளை எல்லாம்
நீங்கள் பின்பற்றி வந்தாலும் நமது ஜாதக கதம்பத்தில்
உள்ள பரிகாரத்திலும் இணைந்துக்கொண்டு பயன்பெற முடியும். ஒரு
நல்ல பரிகாரமாகவே உங்களுக்கு அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment