Followers

Wednesday, December 4, 2019

சித்தர்கள் பகுதி 3


வணக்கம்!
          சித்தர்கள் தொடர்கள் நன்றாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றன. எனக்கு பல நண்பர்கள் போன் செய்து தொடர்ச்சியாக நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் என்று சொல்லிருக்கின்றனர். அனைத்து நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என்னால் முடிந்தளவுக்கு இந்த பதிவை தருகிறேன். 

எல்லோருடைய மனதிலும் கேட்க நினைக்க தோன்றும் கேள்வி எத்தனையோ மார்க்கங்கள் எத்தனையோ ஞானிகள் எத்தனையோ அவதார புருஷர்கள் என்று பல விதத்திலும் பல துறையிலும் இருக்கும்பொழுது இந்த சித்தர்கள் வழி என்பதை ஏன் பின்பற்ற வேண்டும் இது மற்றதைவிட எந்த விதத்தில் சிறந்தது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்ற கேள்வி எழும்.

இது மிகப்பெரிய கேள்வி அதே நேரத்தில் சுலபமாகவும் இதனைப்பற்றி சொல்லலாம். எனக்கு தெரிந்தவரை அனைத்து வழியையும் உள்ளடக்கி உருவானது தான் சித்தமார்க்கம் என்று சொல்லலாம். இது கொஞ்சம் அதிகமாகவே அதோடு ஆன்மீகத்தில் கலந்து சொல்ல வேண்டும் என்றால் சித்தமார்க்கத்தை அதிகமாக பின்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் இந்த பூமியில் இருந்துக்கொண்டு அனைத்து மக்களுக்கும் நல்லதை செய்யவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் சித்தமார்க்கம் என்பதை அதிகம் விரும்புகின்றனர். 

மனிதன் இறந்தால் இந்த பூமியில் இருந்து வேறு ஒன்றுக்கு சென்றுவிடுகிறான் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்த பூமியில் இருக்கமுடியாது என்பதை நன்கு அறிந்துக்கொண்டு இருக்கின்றான் என்பதை தான் சொல்லவேண்டும் ஆனால் சித்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த பூமியில் இருந்துக்கொண்டு ஏதோ ஒரு ரூபத்தில் பூமியில் உள்ள மனிதர்களுக்கு உதவி செய்யமுடியும் அல்லது ஏதோ ஒன்றை செய்யமுடியும் என்ற நம்பிக்கை சித்த மார்க்கத்தில் இருந்து இருக்கின்றது அல்லது இருக்கின்றது என்ற நம்பிக்கை இருக்கின்றது. இது தான் சித்த மார்க்கத்தின் மீது அனைவருக்கும் ஒரு அதீத ஈடுபாடு இருக்கின்றது என்னுடைய கருத்து. உங்களின் மனதில் இதனை போட்டு அலசி பார்த்து நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

சித்த மார்க்கத்தில் தான் ஜீவசமாதி பெரியளவில் பேசப்படுகின்றது. மதத்திலும் ஒரு சில இடத்தில் பேசப்பட்டாலும் அது அந்தளவுக்கு பெரியதாக இல்லை என்று சொல்லலாம். சித்த மார்க்கத்தில் இதனை தான் பெரியதாக வைத்திருக்கின்றனர் என்று சொன்னால் நீங்கள் இதனை நம்பலாம். மதத்தில் சொல்லப்படும் விசயங்கள் அனைத்தும் எப்படி இருக்கின்றது என்றால் கடவுள் அவதாரமாக வந்தார் என்பதை சொல்லுவார்கள். சித்த மார்க்கத்தில் மனிதன் கடவுளாக மாறினான் என்று இருக்கும். 

சித்தமார்க்கம் அனைவராலும் நேசிக்கப்படுகின்றதற்க்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும் என்று நினைக்கிறேன். மனிதனால் கடவுளாக முடியும் என்றால் அனைத்து மனிதனுக்கும் ஒரு உள்ளுக்குள் ஈடுபாடு இருக்க தானே செய்யும். இன்றைக்கு ஒரு சாதாரணமான மனிதன் ஒரு சித்தர் பெயரை சொ்லலி தன்னால் உலவமுடிகின்றது என்றால் அனைவராலும் சித்தமார்க்கத்தை நேசிக்கலாம் அல்லவா. 

சித்தமார்கத்தில் ஒரு மனிதனின் உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மற்றவை அனைத்திலும் என்ன சொல்லுவார்கள் கடவுளோடு தன்னுடைய ஆத்மாவை இணைத்துக்கொண்டால் போதும் என்பது போலவே பேசுவார்கள். உடலுக்கு முக்கியத்துவம் என்பது இருக்காது. சித்தமார்க்கத்தில் உயிருக்கும் முக்கியத்துவம் இருக்கும் உடலுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

சித்தமார்க்கத்தில் உடலை கெடாமல் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளை கண்டுபிடித்து இருக்கின்றார்கள் அல்லவா. உடலுக்கும் நிறைய முக்கியத்துவத்தை கொடுத்த காரணத்தால் தான் சித்த மார்க்கம் தனித்துவமாக தெரிகின்றது. மதங்களில் உடலுக்கு முக்கியத்துவம் என்பது பெரியளவில் பேசப்படுவதில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லுகிறேன்.

மேலே சொன்ன கருத்துக்கள் என்னுடைய சுயகருத்து உங்களின் பார்வையில் வேறு விதமாகவும் இருக்கலாம் அது தவறு என்பதில்லை என்னுடைய அனுபவ கருத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன். உங்களின் வளர்ச்சிக்கு இது உதவினால் எடுத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: