வணக்கம்!
நேற்று மட்டும் ஆறு கோவில்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டது. முதலில் திருவையாறு ஐயாராப்பர் கோவிலை தரிசனம் செய்தேன். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஸ்தலத்தை தரிசனம் செய்தேன். இந்த கோவிலும் வடகரையில் அமைந்துள்ளது. மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம். கோவில் மிக பிரமாண்டமான கோவில். அம்மன் கோவிலும் மிகப் பிரமாண்டமான ஒரு ஸ்தலமாக இருக்கின்றது.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த கோவிலை ஒரு முறையாவது தரிசனம் செய்யவேண்டும். நிறைய சிறப்புகளை பெற்று இந்த தலம் இருப்பதால் அனைவரும் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு இருக்கும் அம்மன் கோவிலில் உள்ள அம்மன் தர்மவர்த்தனி அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அந்தளவுக்கு அழகோடு காட்சி அளிக்கின்றார்.
கோவிலில் வெளிபிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு ஐயாரா என்று அழைத்தால் ஏழு முறை எதிரொலிக்கின்றது. இது எந்த கோவிலும் காணக்கிடைக்காத ஒரு அதிசயம் என்று சொல்லலாம். மிக பரந்த விரிந்த கோவில் ஒரு ஊர் முழுவதும் கோவிலாக இருக்கும் இந்த கோவிலை அவசியம் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். எனது வாட்ஸ்அப்பில் இணைந்து இருக்கும் நண்பர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறேன்.
ஐயாராப்பர் கோவிலை முடித்துக்கொண்டு அடுத்தபடியாக திருவையாறு தியாகாராசரின் அதிஷ்டானம் சென்று வழிபட்டேன். காவிரி கரையில் அமைந்த அதிஷ்டானம். காவிரி ஆற்றில் தண்ணீர் இருப்பதால் பார்ப்பதற்க்கு ரம்மியமாக காட்சிக்கொடுக்கின்றது. கர்நாடக சங்கீதத்தை விருப்படுபவர்கள் இதனை தரிசனம் செய்யலாம்.
தியாகராச கீர்த்தனைகள் மார்கழி மாதத்தில் பாடப்படுவதால் இங்கு தற்பொழுது அதற்க்கு தயாராவதற்க்கு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதனை பெரும்பாலும் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள் தான் தரிசனம் செய்கின்றனர். நாமும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment