வணக்கம்!
சித்தர்களைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். பல நண்பர்கள் தங்களின் தேடுதலுக்கு நல்ல தீனியாக இது இருக்கின்றது என்று சொல்லியுள்ளனர். நம் கையில் ஒன்றும் இல்லை அனைத்தும் அம்மனின் அருளாலும் குருவின் ஆசியாலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
நம்முடைய சுவாசம் ஆன்மீக பக்கம் இருந்தால் நாம் எதனையும் தேடிச்செல்ல வேண்டியதில்லை நம்மை தேடி அனைத்தும் வந்துவிடும். நாம் சித்தர்களை தேடி அலையவேண்டியதில்லை நமக்கு எந்த ஒரு சித்தரின் அருள் வேண்டும் என்று இருக்கின்றதோ அவர்களின் அருள் நம்மை தேடி வந்துவிடும். என்ன புதுசா இருக்கின்றதே என்று எண்ணலாம் இது உண்மையான ஒரு கருத்து.
சித்தர் என்றால் யார் என்று தெரியாத ஒரு காலத்திலேயே என்னை தேடி ஒரு சித்தரின் அருள் கிடைத்தது. அதனைப்பற்றி ஏற்கனவே நான் உங்களிடம் பகிர்ந்து இருக்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வரும்பொழுது பல ஆன்மீகவாதிகளின் அருள் பார்வை என்மீது பட்டது. இதனை நான் செய்த புண்ணியம் என்பதை விட மனது ஆன்மீகத்தை நாடுவதால் வந்த அருள் என்று சொல்லலாம்.
பெரும்பாலானவர்கள் சொல்லும் வார்த்தை நாம் புண்ணியம் செய்து இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். புண்ணியம் என்ற வார்த்தை எல்லாம் நாம் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சு என்பது ஒன்று தான் நமது மனது எதனை நாடுகின்றதோ அது உங்களை நாடி வரும் என்பது தான் பொதுவிதி.
உங்களின் மனது ஆன்மீகத்தை நாடினால் கண்டிப்பாக உங்களை நாடி வந்துவிடும். நீங்கள் பாவம் செய்து இருக்கின்றீர்கள் புண்ணியம் செய்து இருக்கின்றீர்கள் என்ற கணக்கு தேவையில்லை. உங்களின் வேலை அதனை நோக்கி மனதை செலுத்த வேண்டியது மட்டுமே. கொஞ்ச நாளில் உங்களை நாடி நீங்கள் தேடிக்கொண்டு இருக்கும் விசயம் உங்களை நாடி வரும்.
சித்தர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் ஜூவசமாதியை நோக்கி செல்லவேண்டியதில்லை. உங்களின் ஜீவன் அதனை நாடினால் உங்களை நாடி ஜீவஆத்மா வந்துவிடும். இது அனுபவத்தில் நான் சொல்லக்கூடிய ஒன்று. நீங்களும் கண்டிப்பாக தேடுங்கள் கண்டிப்பாக உங்களை நாடி வரும் என்ற நம்பிக்கை தருகிறேன்.
பயிற்சி
நீங்கள் முதலில் செய்யவேண்டியது இன்று முதல் ஒரு குறிப்பிட்ட சித்தரின் அருள் வேண்டும் என்றால் அவரை மனதால் நினைக்க தொடங்குங்கள். மனதால் என்னால் முதலில் செய்வதற்க்கு முடியவில்லை என்றால் உருவ வழிபாடு என்பதை அவரின் புகைப்படங்கள் இருந்தால் எடுத்து உங்களின் பூஜையறையில் வைத்து வணங்க ஆரம்பிக்கலாம். உங்களுக்கு இதனை செய்தும் உங்களுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் அடுத்தது அவரின் ஜீவசமாதி அல்லது அவரின் உருவம் இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் அவரின் அருளை உங்களால் உணரமுடியும்.
இது ஒரு சாதாரணமான ஒரு விசயம் போல் தோன்றும். முதலில் பயிற்சி தொடங்குபவர்களுக்கு குண்டலிணியைப்பற்றி சொன்னால் செய்பவன் கஷ்டபடுவான் என்பதால் இந்த எளிமை பயிற்சியை செய்து பார்க்கலாம். படிப்படியாக பல பயிற்சிகளைப்பற்றி பார்க்கலாம்.
கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம். புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment