வணக்கம் நண்பர்களே இது உங்களுக்காக இந்த பதிவை எனது வேறு பதிவில் இருந்து இதனை தருகிறேன். படித்து விட்டு என்னை திட்டாதீர்கள் புராணங்களைப்பற்றி நிறைய எழுதியுள்ளேன் அதில் ஒரு புராணத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லுகிறேன் படியுங்கள்.
கருட புராணம் என்று ஒரு புராணம் இருப்பது அனைவருக்கும் தெரியவந்ததே அந்நியன் படத்துக்கு பிறகு தான் அனைவருக்கும் தெரியும் அந்த புராணத்தில் நடக்கும் விவாதங்கள் கருடனுக்கும் திருமாலுக்கும் நடக்கும்.
கருடன் திருமாலை பார்த்து யமபுரி எங்கு உள்ளது அதனைப்பற்றி சொல்லுங்கள் அதற்கு திருமால் சொல்லுவார் யமபுரிக்கு செல்லும் வழியில் செம்பை உருக்கி வார்த்தது போல வெப்பம் தந்துக்கொண்டிருக்கும். அதற்கு அப்புறம் போனால் முட்கள் மேல் தீக்கொள்ளிகள் எரிந்து கொண்டு இருக்கும். அதற்கு அப்பால் போனால் தாங்கமுடியாத குளிர்பிரதேசம் இருக்கும். இதை எல்லாம் மனிதராக பிறப்பவர் கடந்து செல்ல வேண்டும்.
பூலோகத்திற்க்கும் யமலோகத்திற்க்கும் இடையில் உள்ள தூரம் எண்பதாயிரம் காதவழி இருக்கிறது என்று சொல்லுகிறார். இடையில் பருகுவதற்க்கு தண்ணீர் தரமாட்டார்கள் இளைப்பாருவதற்க்கு நிழல் இருக்காது Non stop Journey தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.
தென்திசைக்கும் நிருதிதிசைக்கும் இடையில் யமபுரியானது இருக்கிறது என்று சொல்லுகிறார்.தேவர்களும் அசுரர்களும் இருவராலும் தகர்க்கமுடியாத கோட்டைக்கள் யமனுடைய கோட்டைகள் என்று சொல்லுகிறார்.
அங்கு மனிதருக்கு தரும் தண்டனைகளைப்பற்றியும் சொல்லுகிறார். சில மனிதர்களுக்கு உலகை அடி சிலரை கடுமையான ஆயுதத்தால் அடிப்பார்கள் சிலரை கத்தியால் சீவிவிடுவார்கள்.சில பேரை கரும்பு பிழிவார்களே அதுபோல பிழிவார்கள்.நம்ம ஆளுங்க சிக்கனை அனலில் வாட்டி சாப்பிடுவார்களே அதுபோல அனலில் மனிதனை வாட்டுவார்களாம்.
இந்த மாதிரி நிறைய தண்டனைகளை கருட புராணத்தில் சொல்லியுள்ளார்கள். இந்த மாதிரி தண்டனைகளை இப்பொழுது பூமியிலேயே நம்ம ஆட்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பகவத்கீதையில் கண்ணன் சொல்லுகிறான். உன்னுள் ஆயுதத்தால் வெட்டப்படாத ஒன்று உள்ளது என்கிறான். தீயால் சுடாதது ஒன்று உள்ளது என்று சொல்லுகிறான் அவன் சொல்லுவது ஆத்மாவை தான் ஆனால் கருடபுராணம் சொல்லுவது மனிதன் இறந்த பிறகு அவனுக்கு கொடுக்கும் தண்டனைகளை சொல்லுகிறது.
இறந்த பிறகு ஆத்மா உடலை விட்டு பிரிகிறது அதனால் உடல் எம உலகத்திற்க்கு செல்லுவதில்லை ஆத்மா தான் செல்லும். ஆத்மாவிற்க்கு எந்த வலியும் தெரியாது என்று கண்ணன் சொல்லுகிறான். கருடபுராணம் ஆத்மாவிற்க்கு கொடுக்கும் தண்டனைகளை சொல்லுகிறது
எப்படி இந்த முரண்பாடான கருத்து இருக்கு என்று எனக்கு யோசிக்க தோன்றியது. கருட புராணம் தவறா அல்லது பகவத்கீதை தவறா சொல்லுங்கள் பார்க்கலாம்.
நான் நினைத்தது உடல் இறந்த பிறகு ஆத்மாவிற்க்கு வலி வந்துவிடுமோ என்று கூட நினைத்தேன். இதுமாதிரி நிறைய எழுதி வாங்கிகட்டிக்கொண்டு இருக்கிறேன் அனைவரும் என்னுடன் தினமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் தான் அதனால் எனக்கு பிரச்சினை இல்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
6 comments:
எங்க போனாலும் நம்ம நண்பர்கள் நம்ம கூட வருவாங்க. அதனால பயம் இல்லை.
//*பழனி.கந்தசாமி said...
எங்க போனாலும் நம்ம நண்பர்கள் நம்ம கூட வருவாங்க. அதனால பயம் இல்லை.*//
வருக ஐயா தங்களின் கருத்துக்கு நன்றி
யம பயம் உங்களுக்கு வந்துடுத்துன்னு நினைக்கிறேன். அவாளுக்குத் தான் இப்படி எல்லாம்
எண்ணங்களும் பயம் வரும். அப்படின்னு சாஸ்த்ரம் தெரிஞ்சவா சொல்றா. எதுக்கும்
மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் பண்ணுங்கோ !!
சுப்பு தாத்தா.
வணக்கம் ஐயா,
கனவில் இயற்கை உபாதை மற்றும் விளங்கமுடியாத நடப்புகள் வரும் அவைகளுக்காக நாம் கவலைப்படுவோம், ஆனால் விழித்தபின் (உரங்கடவு) வரை அந்த கனவுகளை பற்றி யோசிப்போம் பின் மறப்போம், இது ஆத்மாவுக்கும் உண்டு. அதனால்தான் பெரியவர்கள் சொல்லுவது போல, “மண்,பொன்,பெண்,”, அவற்றின் மீது எப்பொழுதும் ஆசைபடாமல், ஏனென்றால் அதனை உன்னால் வெல்லமுடியாது, அதுதான் உன்னை வெல்லும். ஆகவே அன்பின்மீதும், தருமத்தின்மீதும், எப்பொழுதும், ஆசைப்பட்டு வாழ்க்கை நடத்துவோமேயனால், கனவில் எப்படி ஆழ்ந்த உறக்கம் ஏற்படுமோ, அதுபோல் ஆன்மாவும் எந்த ஒரு இம்சையன்றி, பரம்பொருளிடம், சேரும். ஆகவே அன்பு இல்லையென்றால் ஆன்மா அல்லல் படும், அதனால் மறுபிறவி உண்டாகும். இதனை மக்களுக்கு புரியவைக்கவே பெரியவர்கள் புராணம், இதிகாசம், போன்றவற்றை, தோற்றுவித்தார்கள், ஆனால் மக்கள் இதனை புரிந்துகொள்ளாமல் மாக்களாய், உள்ளனர்.
G.R. MURUGAN BSNL CHENNAI murugan1960@gmail.com
வணக்கம் முருகன் தங்கள் கருத்துக்கு நன்றி
sathish
vanakkam
yennnai porutha varai aathmaavuku thandanai kuduka mudiyathu yenbathaal. pagavath keethai thaan sari, oruvan seiyum pilai avan adutha piraviyil thaan anubavipaane thavira,
yemalogathil illai yenbathu enathu karuthu
Post a Comment