வணக்கம் நண்பர்களே !
ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் நாம் முழுமையாக கூட ஆராய்ந்து பார்க்க தேவையில்லை. அவர்களின் ராசி அல்லது அவர்களின் நட்சத்திரத்தை கேட்டாலே ஐம்பது சதவீத சோதிடத்தை நாம் சொல்லிவிடலாம். அப்படி நாம் பார்க்கும்பொழுது இன்று ராகுவின் நட்சத்திரத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை என்னுடைய அனுபவத்தில் இருந்து தருகிறேன் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
ராகுவின் நட்சத்திரம் என்று பார்த்தால் திருவாதிரை சுவாதி மற்றும் சதயம் ஆகியவை ஆகும்.
திருவாதிரை மற்றும் சதயம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகபட்சமாக பைத்தியம் பிடித்துவிடும். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி அதிபதியான சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் இவர்கள் மட்டும் தப்பிப்பார்கள். திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு நாள் கூட நிம்மதியாக அவர்கள் தூங்கமுடியாது. அவர்களின் மனநிலை எதையாவது கற்பனை செய்துக்கொண்டே இருக்கும். தேவையற்ற மனக்குழப்பத்தில் இருப்பார்கள்.
இவர்களுக்கு வயது ஏற ஏற மனசிதைவு அதிகமாக இருக்கும். இளவயதில் இருந்தே மனநலமருத்துவரை சந்தித்துக்கொண்டு இருப்பது நன்மையளிக்கும்.இவர்கள் காமத்திலும் அதிகஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் பக்தியிலும் ஈடுபாடு காட்டுவார்கள் எதிலும் திருப்தியை கொடுக்காது. அதிகமான மாந்தீரக தொடர்பு இவர்களிடம் இருக்கும் அதே நேரத்தில் மாந்தீரீக பாதிப்பும் இவர்களுக்கு வந்துவிடும்.
தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதில் இவர்களை விட்டால் ஆள் கிடையாது. இவர்களின் மகன் மகளுக்கு திருமணம் இவர்களின் பேச்சை கேட்டு நடக்காது அவர்கள் இஷ்டம் போல் தான் வரனை தேடிக்கொள்வார்கள். தன் குழந்தைகள் வழியாக அதிகமான அவமானத்தை சந்திப்பவர்கள் இவர்கள் தான்.
இவர்களிடம் பேசி பாருங்கள் அனைத்தும் சந்தேகத்தோடு பேசுவார்கள். பதுங்கி வாழ்வது வெளியில் தலைகாட்டுவது கிடையாது. வீட்டுக்குள்ளே இருந்து திட்டம் போடுவது இவர்களின் வேலையாக இருக்கும். அதே நேரத்தில் நன்றாக மாட்டிக்கொள்வார்கள். பாம்பு என்ன செய்யுமோ அதனை செய்வது இவர்களாக தான இருப்பார்கள்.
இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நான் இருக்கும் பகுதியில் இன்று மின்சாரத்தடை அதனால் இத்துடன் முடித்துக்கொண்டு மின்சாரம் வந்தவுடன் இதனைப்பற்றி மேலும் பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
arumayaana thagavalgal.
arumayaana thagavalgal.
Its 100% correct
sir, Thiruvadirai is Lord Siva's star. So he also has this behaviour by nature. Pl explain.
Post a Comment