Followers

Saturday, June 1, 2013

தடைகள் விலக பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    நாம் செய்கின்ற காரியங்கள் எந்தவித தடங்களும் இல்லாமல் நடைபெற்றால் நாம் நினைக்கின்ற இலக்கை வெகு எளிதில் அடையலாம். மனிதன் நினைப்பது அனைத்தும் கிடைத்துவிட்டால் அவனை ஒன்றும் செய்யமுடியாது என்று தான் கடவுள் பல தடைகளை உருவாக்குகிறார் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் மனிதனின் சக்தியை முழுவதும் பயன்படுத்தினால் அவனை ஒன்றும் செய்யமுடியாது. மனிதன் எப்படியாவது தான் நினைத்த இலக்கை அடையவேண்டி பல வழிகளை பின்பற்றுகிறான்.

பல வழிகளில் ஆன்மீகமும் ஒன்று இந்த ஆன்மீகத்தில் உட்பிரிவான சோதிடத்தில் என்ன காரணத்தால் தடைகள் வருகின்றன என்று பார்த்தால் அது பித்ரு தோஷத்தால் வருகிறது என்று பார்க்கிறோம். அந்த பித்ருதோஷத்திற்க்கு என்ன செய்தால் அந்த தோஷம் போகின்றன என்று பல வழிகளை நமக்கு நமது மதம் தருகிறது. அதில் இருந்து ஒரு விசயத்தை மட்டும் உங்களிடம் தருகிறேன். அதனை நீங்கள் செய்து இந்த தடைகளை வென்று வெற்றியை அடையவேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்பொழுது நமது தடையை வெல்லமுடியும் இறந்தவர்களுக்கு திவசம் செய்யும்பொழுது காய்கறிகளை சமர்பணம் செய்வார்கள். அந்த காய்கறியில் கண்டிப்பாக புடலங்காய் இருக்கும். இந்த புடலங்காய் மிகவும் விசேஷமான ஒன்று. பித்ரு உலகம் என்று ஒரு உலகம் இருக்கிறது அங்கு மிகச்சிறந்த மூலிகையாக விளங்குவது இந்த புடலங்காய் தான். புடலங்காய் அங்கு தெய்வீக ஆற்றலை கொண்டது என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த புடலங்காயை நாம் அமாவாசை விரதம் செய்யும் பொழுது இதனை உணவு செய்து படைத்துவிட்டு நீங்கள் சாப்பிடலாம். எப்பேர்ப்பட்ட தடையும் நீக்கும் ஆற்றல் கொண்டது.அமாவாசை மட்டும் இல்லை சனிக்கிழமையில் கூட நீங்கள் இதனை சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

KJ said...

Useful info.

Anonymous said...

இதுவரை அறிந்திராத புதிய தகவல் !
மிக்க நன்றி !

sarav said...

new information altogether about pudalangai