வணக்கம் நண்பர்களே!
ஒருவருக்கு நீண்டஆயுளை தருவதில் மற்ற கிரகங்களைவிட குரு கிரகம் மிக முக்கியமானது. இதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக ஜாதகத்தில் அமரும் பட்சத்தில் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளை கொண்டவராக இருப்பார். குரு கிரகம் பாதிப்படையும்பொழுது அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவுவாக தான் இருக்கும். நீண்ட ஆயுள் இல்லாமல் பாதியிலேயே சென்றுவிட வாய்ப்பு அதிகமாக இருக்கும். நான் பொதுவாக சாதியைப்பற்றி அதிகம் பேசுவதில்லை ஒரு உதாரணத்திற்க்காக இதில் மட்டும் கொஞ்சம் பார்க்கலாம். பிராமணர்களின் வயதைப்பார்த்தால் அதிகமாக இருக்கும். சர்வ சாதாரணமாக நூறுவயது வரை வாழ்வார்கள் அவர்களின் உணவுமுறை ஒருபக்கம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் ஒரு சூட்சமம் இருக்கிறது. ஒரு பிராமணரின் ஜாதகத்தை நாம் பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக அமையும். குரு சனியின் பார்வையில் மற்றும் ராகுவோடு சேர்ந்து இருக்காது. நல்லமுறையில் அமர்ந்து இருக்கும்.
குரு நன்றாக அமைவதற்க்கு காரணம் அவர்களின் முன்னோர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்கள் மந்திர சாஸ்திரங்களில் நன்றாக பழக்கம் இருக்கும். குரு மந்திரத்திற்க்கு உரியவர் அல்லவா. குரு கிரகம் அவர்களின் பிள்ளைகளுக்கும் நன்றாக அமையும். மந்திரங்களை சொல்லுபவர்களுக்கு குரு நன்றாக அமையவில்லை என்றால் என்ன செய்யமுடியும்.
இன்றைய காலகட்டத்தில் பிராமணர்களுக்கு குரு நன்றாக அமைவதில்லை. பல பிராமணர்களின் ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் ராகு, கேது, சனி, சுக்கிரன் பார்வையில் அல்லது சேர்ந்து காணப்படுகிறது. அவர்களும் வழி மாறிவிட்டார்கள்.
டாக்டரே நோயாளியாக இருந்தால் நோயாளி என்ன ஆவான் என்று நீங்களே முடிவு எடுத்துக்கொள்ளுங்கள். மந்திரங்களுக்கு உரியவன் குரு. அவனே பல்பு வாங்குகிறான் என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.இன்று பல பிராமணர்கள் அல்லாத ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் பெற்றோர்கள் நல்ல ஆன்மீகவாதிகளாக இருக்கும்பொழுது அவர்களின் குழந்தைகளுக்கு குரு கிரகம் நன்றாக அமைகிறது.
ஜாதகத்தில் குரு நன்றாக அமையும்பொழுது ஒருவரின் ஆயுள் நன்றாக இருக்கும். குரு நன்றாக அமையவில்லை என்றால் அவனின் ஆயுள் குறைவு.
நண்பர்களே அடுத்த வாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிக்கு செல்லுகிறேன். அங்கு உள்ள நண்பர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.
9551155800.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
Sir, Ayul karagan sani nandraga irunthu, guru ketirunthal ena palan.
ஆயுள்குறைவாக தான் இருக்கும் KJ
Post a Comment