Followers

Sunday, June 2, 2013

வக்கிர எண்ணம் : உதாரண ஜாதகம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். மகர லக்கனம் மீன ராசி. லக்கினாதிபதியாகிய சனிபகவான் எட்டாம் வீடாகிய சிம்மத்தில் போய் அமர்ந்துவிட்டார். லக்கினாதிபதி எட்டில் அமர்வது கெடுதல் அதுவும் சிம்மத்தில் அமருகிறார். இவரின் உடல்நிலையில் ஏதாவது குறை இருந்துக்கொண்டே இருக்கும். குறை என்றால் எதாவது நோய் வந்துக்கொண்டே இருக்கும். இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது. அடிக்கடி தலைவலி என்று சொல்லுவார்.

ராஜகிரகங்கள் என்று வர்ணிக்ககூடிய சனி,குரு இரண்டு கிரகங்களும் கெட்டுவிட்டது. குரு ஆறாவது வீட்டில் போய் அமர்ந்துவிட்டார். அடுத்ததாக செவ்வாய் கிரகம் ஏழில் போய் அமர்ந்து விட்டார்.ஏழில் இருந்து லக்கினத்தை செவ்வாய் பார்த்தால் என்ன ஆகும் உடலில் காயவடுவை ஏற்படுத்துவார். முகத்தில் வெட்டப்பட்ட காயம் இவருக்கு இருந்தது. செவ்வாய் நீசம் பெற்று அமர்ந்துவிட்டார். செவ்வாய் சுகஸ்தானத்திற்க்கு அதிபதி அல்லவா. ஒரு சுகமும் அனுபவிக்கவில்லை.

ராகு கேது நிலைகளை பாருங்கள். மூன்றில் கேதுவும் ஒன்பதில் ராகுவும் அமர்ந்துவிட்டார். இளம்வயதில் பையன் காதலில் புகுந்து விளையாடினார். காமத்திலும் தான். மூன்றில் இருந்த கேது அதனை செய்தார். எடுத்த எந்த காரியமும் உருப்படவில்லை. ஏன் என்றால் அனைத்திலும் தடையை ஏற்படுத்தினார்கள் ராகுவும் கேதுவும்.

இவரின் நினைப்பை பார்த்தால் அனைத்தும் வில்லங்கமாக தான் இருக்கும். நாம நேர்வழியில் சிந்தித்தால் இவர் குறுக்குவழியை சிந்திப்பார்.ஏன்டா அனைத்திலும் வில்லங்கமாக சிந்திக்கிறார் என்று பார்த்தால் அப்பொழுது அவரின் ஜாதகத்தின் கிரகங்கள் அமர்ந்த நிலையை பார்த்தால் மூன்று கிரகங்கள் வக்கிரநிலையில் செல்லுகிறது. அதுவும் எந்த கிரகங்கள் என்று பார்த்தால் சனி குரு செவ்வாய் மூன்றும் வக்கிரகதியில் சென்றுக்கொண்டு இருக்கிறது. சரி அவர்கள் தான் வேலையை காட்டுகிறார் என்பது புரிந்தது. ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரகதியில் சென்றாலே பிரச்சினை. இவரின் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரநிலையில் செல்லுகிறது. இவர்களிடம் நாம் மாட்டினால் நம்மை அழிக்காமல் விடமாட்டார்கள்.


இவரின் வாழ்க்கை போராட்டமாக தான் போய்க்கொண்டு இருக்கிறது. திருமணமும் நடைபெறவில்லை. ஒரு ஜாதகத்தின் பலனை முழுமையாக சொல்லவேண்டும் என்றால் அது நமக்கு நேரம் இருக்காது. அனைத்தையும் பார்த்து பலன் சொல்லுவது கடினமான ஒன்று தான். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கருத்தைப்பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

5 comments:

KJ said...

Very good analysis sir. For this native, sukran dasa (yogathypathy) will give benefits as he sits at second place with lagnathypathy aspect. Also he have budhan in lagnam is always good sign. Budha-aditya yogam. Pleas correct me if i am wrong.

rajeshsubbu said...

வணக்கம் KJ எத்தனை யோகம் இருந்தாலும் லக்கினாதிபதி நன்றாக இருக்கும்பட்சத்தில் தான் யோகம் வேலை செய்ய ஆரம்பிக்கும். லக்கினாதிபதி நன்றாக இல்லை என்றால் எல்லாம் வீண்.

https://astroclass2pc.blogspot.com/ said...

அருமையான ஜாதக அலசல்.

https://astroclass2pc.blogspot.com/ said...

ஜாதகத்தை அலசிய விதம் அருமையாக இருந்தது.

rajeshsubbu said...

வருக Jothida Nanban Balu Vellore வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி