வணக்கம் நண்பர்களே!
ஒரு ஆன்மீகவாதியின் அதிகபட்ச சேவை என்ன என்றால் ஆத்மாவின் மோட்சத்திற்க்கு வழி செய்வது மட்டுமே. எந்த ஒரு ஆன்மீகவாதியும் இதனைப்பற்றி வெளியில் சொல்வதில்லை.
ஒவ்வொரு ஆன்மீகவாதியும் ஆத்மாவிற்க்கு மோட்சத்திற்க்கு வழி செய்யவதற்க்கே கடவுளால் படைக்கபடுகிறார்கள். ஆன்மீகவாதியை இறைவன் படைப்பதன் நோக்கம் இந்த பணி்ககு மட்டுமே. தமிழ்நாட்டில் இதனை அதிகம் செயவதில்லை என்று நினைக்கிறேன். வடமாநிலங்களில் இதனை பல ஆன்மீகவாதிகள் செய்கின்றனர். இதனை செய்வதற்க்கு என்றே பயிற்சிகள் உண்டு.
இந்த வேலையை செய்து கொண்டு தான் அவர்கள் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையமுடியும். இப்படி செய்பவர்கள் சிவனின் அம்சமாக திகழ்வார்கள்.அவர்களை நாம் வணங்கினால் கூட நமது கர்மாவின் பாவகணக்கு குறையும்.நாம் ஆன்மீகவாதிகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று சொல்லுவது கூட இந்த காரணத்தால் மட்டுமே. அவர்கள் தன் வாழ்க்கையை அதற்கென்றே அர்பணித்துக்கொள்பவர்கள் அவர்களிடம் சென்று நாம் தகராறு செய்து நாம் கர்மாவை எந்தவிதத்திலும் கரைத்துக்கொள்ளமுடியாது.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பல பேர்களின் ஜாதகத்தில் அப்படி இருக்கும். ஆன்மீகவாதிகளிடம் சண்டை இட்டுக்கொள்வது மாதிரி ஜாதகம் அமையும் அவர்களுக்கு இந்த பதிவில் சொன்னேன்.
யார் ஆன்மீகவாதியிடம் சண்டை போடுவார்கள் என்றால் ஒரு ஜாதகத்தில் குரு கெடும்பொழுது அந்த நபர்கள் ஆன்மீகவாதிகளை கண்டாலே அவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் தான் இப்படி ஏடாகூடாமாக எதையாவது செய்து மாட்டிக்கொள்வார்கள்.
பூர்வபுண்ணியம் கெடும் ஆட்கள் கூட இப்படி தான் செய்துக்கொண்டு இருப்பார்கள் அவர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.இந்த மாதிரி நான் பல பேரை பார்த்ததால் உங்களி்டன் இதனைப்பற்றி பகிர்ந்துக்கொண்டுள்ளேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
it means Guru in necham, right?
வணக்கம். அதனையும் எடுத்துக்கொள்ளலாம.
Post a Comment