Followers

Monday, June 17, 2013

ஞானியை உருவாக்கும் தசா


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலருக்கு ஆறாம் வீட்டில் அமரும் கிரகம் அல்லது ஆறாவது வீட்டு அதிபதியின் தசா நடைபெறும் அப்பொழுது அந்த மனிதர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை கொஞ்சம் பார்க்கலாம்.

ஒரு சிறந்த ஞானியை உருவாக்குவதில் ஆறாம் வீட்டுக்காரருக்கு நிகர் அவர் மட்டுமே. ஒருவன் ஞானியாக உருவாகவேண்டும் என்றால் என்ன அவனுக்கு நடைபெறும். அவனை சுற்றி அப்படியோரு அவலம் நடைபெற்று இருக்கவேண்டும். அவனை நோக்கி ஏகாப்பட்ட தாக்குதல் நடைபெற்று இருக்க வேண்டும். இப்படி நடந்தால் தான் அவன் ஞானத்தை நோக்கி செல்லமுடியும்.

ஆறாம் வீட்டு அதிபதி மோசமாக இருந்து தசா நடைபெற ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்து சொந்தங்களும் அவனுடன் சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள். சொந்தங்கள் மீது வெறுப்பு வருமே தவிர பாசம் சுத்தமாக வராது. இவர்களே சொந்தத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சொந்தங்கள் வழியாக வரும் பந்தம் பாசம் போய்விடும்.

ஏழாவது வீட்டுக்கு விரைய வீடு என சொல்லகூடிய வீடு ஆறாவது வீடு அல்லவா. ஏழாவது வீடு துணையை காட்டும் வீடு அல்லவா. துணைக்கு எதிராக நடைபெறும் தசா ஆறாவது வீட்டு தசா அப்பொழுது என்ன ஆகும். துணைவர் மூலம் பிரச்சினையை சந்திக்க வேண்டும். ஒருவருக்கு துணைவர் பிரச்சினையை கொடுத்தால் எப்படி ஆவார்கள் வாழ்க்கையை வெறுக்காமல் மகிழ்ச்சியாகவா இருப்பார்கள். வாழ்க்கை வெறுப்பின் உச்சம் கட்டம் நடந்துவிடும்.

ஆறாவது வீட்டு தசாவின் மிக முக்கிய குணம் ஒருவனை கடனில் தள்ளிவிடுவது. ஒருவனுக்கு கடன் வந்துவிட்டால் அவனை விட்டு மொத்த பேரும் விலகிவிடுவார்கள். கடனாக கொடுத்தவர்கள் மட்டு்ம் வந்து கொல்லாமல் கொல்வார்கள். நாட்டையே இழந்து நிற்கும் நிலையை வர்ணிப்பது கூட கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் என்று தானே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்கிவிடும் ஆறாவது வீட்டு தசா. 

பொதுவாக ஆறாம் வீட்டு தசா மிகப்பெரிய ஞானியை உருவாக்குவதில் வல்லவர் இவராக தான் இருக்கமுடியும். ஆறாம் வீட்டு தசா அல்லது ஆறாம் அதிபதியின் தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Swami said...

nootrukku nooru unmai.

rajeshsubbu said...

//* Swami said...
nootrukku nooru unmai. *//

தங்கள் கருத்துக்கு நன்றி

KJ said...

Thanks sir. For magara lagna, budhan is owner for 6 and 9 houses. How abt effects if budhan dasa comes for the native.