Followers

Saturday, June 1, 2013

முருகனின் கர்வம்


வணக்கம் நண்பர்களே!
                     திருவண்ணாமலை சென்றபொழுது எனது நண்பர் திரு பாபு அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அது என்ன என்றால் முருகனை வழிபடுபவர்களுக்கு கர்வம் அதிகமாக இருக்கிறது அது எதனால் என்றார்.

ஜாதகத்தில் செவ்வாய் சொந்தவீட்டில்,நட்பு வீட்டில் அல்லது உச்சவீட்டில் இருந்தால் அவர்களுக்கு செவ்வாயின் குணங்கள் அதிகமாக இருக்கும். செவ்வாய் போர்குணம் உடைய கிரகம். சண்டை போட்டு வெற்றிக்கொள்பவனுக்கு கர்வம் இருப்பது இயல்பான ஒன்று. அந்த கர்வமே ஒருவருக்கு வீழ்ச்சியை கொடுக்கும். அதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இப்படி இருப்பவர்கள் அடுத்தவர்களோடு கொஞ்சம் விட்டு்க்கொடுத்து போகமாட்டார்கள்.

எந்த ஒரு கிரகத்தின் தன்மையையும் குறைப்பதற்க்கு ஒரு சில வழிகள் இருக்கின்றன அதனை கடைபிடித்து அந்த கிரகத்தின் தன்மையை குறைக்கமுடியும். இது சாதாரணமானவர்களுக்கு புரியாது ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பயன்படும். முருகனுக்கு அக்னி குணம் உடையது அல்லவா. அக்னி எரிவதற்க்கு என்ன தேவை காற்று வேண்டும். காற்று இருந்தால் மட்டுமே அக்னியால் நன்றாக எரியமுடியும்.  வாயு பகவானை பிடித்து அக்னியை அணைக்கமுடியும் இது ஒரு வழி. காற்று கிரகம் சனி அல்லவா. அது தான் சனிக்கும் செவ்வாய்க்கும் பகை. 

வாயு பகவானை வைத்து வாயுவை எடுத்துவிட்டால் அக்னியால் எரியமுடியாது. இந்த தத்துவங்கள் எல்லாம் பஞ்சபூதங்களை கட்டுபடுத்துபவர்களால் முடியும். இதற்கு எல்லாம் நன்றாக பயிற்சி செய்திருக்க வேண்டும். 

செவ்வாயை சும்மா கட்டுபடுத்துகிறேன் என்று இறங்கி மாட்டிக்கொள்ள கூடாது. செவ்வாய் அதிவேகமான கிரகம் உடனே தாக்குதல் நடத்தி காரியத்தை கெடுத்துவிடும். பொறுமையுடன் இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். நல்ல குரு இதற்கு வேண்டும். அவரின் உதவியோடு செய்யமுடியும்.

எனக்கும் முருகனின் அம்சம் கொண்டவர்களுக்கும் அடிக்கடி சண்டை வரும் அது ஏன் என்று எனது முன்ஜென்ம உறவினர் ஒருவர் இருக்கிறார் அவருக்கு மட்டும் தெரிந்த ரகசியம். எனக்கு அது தெரியாது. கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும். நான் அவர்களிடம் எப்படியும் உங்களின் கர்வத்தை அடக்குவேன் என்று சொல்லுவேன்.

நண்பர் பாபு அவர்கள் முருகனின் மிக தீவிர பக்தர். முருகன் பெயரை சொன்னாலே அவருக்கு உடம்பில் முருக்கேறும். அவரின் ஆசை எப்படியும் முருகனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே, எனது குருநாதரிடம் கேட்டுவிட்டு அவர்க்கு அதற்க்கான பயிற்சியை தரவேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

dreamwave said...

kodi nandrigal -babu

rajeshsubbu said...

வணக்கம் பாபு சார் செய்யவேண்டியது எனது கடமையும் கூட.