வணக்கம் நண்பர்களே!
லக்கினாதிபதியான செவ்வாய் ஏழில் குருவோடு அமர்ந்திருக்கிறார். செவ்வாயும் குருவும் ஏழில் அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார்கள். தலையில் அடிப்படும். அதே போல் இவருக்கு தலையில் ஒரு அடிபட்டது. தன் லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் காயத்தை ஏற்படுத்தினார்.
ஒரு தகவலை உங்களுக்கு தருகிறேன். செவ்வாய் ஏழில் இருந்து லக்கினத்தை பார்ப்பதால் அவரின் இனஉறுப்பு சிறிதாக இருக்கும். சோதிடம் என்று வந்தால் அனைத்தும் உண்டு தானே. விடுங்கள் அடுத்ததை பார்க்கலாம்.
இரண்டாவது வீட்டு அதிபதியான சுக்கிரன். பூர்வபுண்ணியத்தில் போய் அமர்ந்துள்ளது. பணம் இவருக்கு கொட்டியது. மூன்றாவது வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறது பையன் இளம்வயதில் இருந்து காமத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் என்று சொல்லலாம். இருக்கின்ற சொத்தை செலவு செய்ய வந்தவர் என்று சொல்லலாம்.
சனியின் நிலையை நன்றாக கவனியுங்கள். ஆறாவது வீட்டில் இருக்கிறார். சனி ஆறாவது வீட்டில் இருந்தால் நல்ல சொத்துக்கள் இருக்கும் அதே நேரத்தில் அந்த சொத்துகளும் சேர்ந்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஆறாவது வீட்டில் சனி அமரும் பொழுது அவன் பிறக்கும்பொழுது நல்ல வசதியான வீட்டில் பிறப்பான் அல்லது வசதி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார்.
ஆறாம் வீட்டில் சனிக்கிரகம் அமர்ந்து இருப்பதால் இவருக்கு நல்ல தைரியம் ஏற்படும். இந்த தைரியம் தான் மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்கும். ஆறாம் வீட்டில் இருந்துக்கொண்டு பத்தாவது பார்வையாக தைரியஸ்தானமான மூன்றாவது வீட்டை பார்ப்பார். இவராகவே வெற்றியை தக்கவைத்துக்கொள்வார்
ராகு கேதுக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்து இருக்கிறது. சந்திரன் மட்டும் தான் வெளியில் இருக்கிறார் அப்படி இருந்தும் நல்ல விதமாக தான் இவரின் வாழ்க்கை நன்றாக செல்லுகிறது.
பல செய்திகளை இவரின் ஜாதகத்தில் சொல்லலாம் நேரப்பற்றாகுறை காரணமாக சொல்லமுடியவில்லை அடுத்த ஜாதகத்தில் வேறு ஒரு ஜாதகத்தை வேறு தகவலோடு நாம் பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
நீங்கள் சொல்லாமல் [ எங்களுக்காக ] விட்ட சில இவைகளாகவும் ?
இருக்கலாமோ ? சரியோ ?
1. இவர் பிற்காலத்தில் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடலாம்.
லௌகீகத்தைத் துறப்பார் எனக் கொள்ளலாம் .
2. இவர் உத்யோகம் சம்பந்தமாக வெளிநாடு சென்று இருக்கலாம்.
பிற்காலத்தில் அங்கேயே தங்கி விடவும் வாய்ப்புண்டு .
3. அரசியலில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம்.
கம்யூனிகேஷன் துறையில் இருப்பவராய் இருக்கலாம்.
வணக்கம் ஸ்ரவாணி தங்களின் பலன் சரியானவையே. நன்றி
தங்களின் பதில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் .
நன்றி !
Post a Comment