Followers

Saturday, June 29, 2013

சினிமா அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                     தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா என்னடா சினிமா அனுபவம் எல்லாம் எழுதுகிறார் என்று நினைப்பது தெரிகிறது இதிலும் சோதிட தகவல் இருக்கிறது கொஞ்சம் ஜாலியாக படித்து பாருங்கள்.வியாழன் அன்று காலையில் பதிவை எழுதும்பொழுது மின்சாரம் போய்விட்டது உடனே பதிவை வலையேற்றிவிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே கேட்டால் இன்று முழுவதும் மின்சாரம் வராது என்று சொல்லிவிட்டார்கள்.

நீண்ட நாட்களாக ஒரு நண்பர் அவரி்ன் வீட்டிற்க்கு கூப்பிட்டு இருந்தார். சரி அவரின் வீட்டிற்க்கு செல்லாம் என்று முடிவு எடுத்து அவரை பார்த்துவிட்டு வந்தேன். மதியம் 2 மணியாகிவிட்டது சரி என்ன செய்யலாம் என்று  பார்த்தேன். சினிமாவுக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். சினிமா என்றால் சத்யம் தியேட்டரில் மட்டும் பார்க்க விருப்பம் இருக்கும். ஏன் என்றால் நல்ல தரத்தோடு படம் பார்க்கலாம். 

தனியாக எப்பொழுதும் சினிமா பார்ப்பதில்லை எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் நான் சென்னை வந்ததில் இருந்து அவருடன் தான் படம் பார்க்க செல்வது. அவர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார் அவர் கம்பெனிக்கு சென்றதால் அவரை கூப்பிடவில்லை. திடீர் திட்டமாகிவிட்டதே. அந்த நண்பரின் பெயர் பென்னி ஆண்டனி கேரளாவை சேர்ந்தவர் இவர் எப்பொழுதும் ஆன்மீகம் ,சோதிடம் என்று இருக்காதே என்னோடு வா என்று ஞாயிறு அன்று  அழைத்துக்கொண்டு செல்வார். சென்னையில் பழக்கம் ஆன முதல் நண்பர் அவர் மட்டுமே அவர் கூப்பிடுவதால் சென்றுவிடுவேன்.

நான் சினிமா பார்க்க அதிகமாக செல்வதில்லை.கடைசியாக படம் பார்த்தது விஸ்வரூபம் என்ற படத்தை பார்த்தேன். அதன் பிறகு இப்பொழுது தான் தியேட்டர் வாசலில் அடிவைக்கிறேன். என்ன படம் பார்ப்பது என்று முடிவெடுத்து உள்ளே போய் கவுண்டரில் பார்த்தேன். தீயா வேலை செய்யுனும் குமாரு என்ற படத்தை தேர்வு செய்து டிக்கெட்டை எடுத்தேன். 

இந்த படத்தை ஏன் தேர்வு செய்தேன் என்றால் நல்ல காமெடியாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள் அதனால் எடுத்தேன். உள்ளே சென்றால் பத்து நிமிடத்திற்க்கு சென்னையில் இருக்கிற அனைத்து நகைகடையின் விளம்பரமும் போட்டு காண்பிக்கிறார்கள்.  இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று தான் என் மனது என்னை கேட்டது.  

சோதிட தகவல்
               தியேட்டர்கள் இருக்கும் இடம் சுக்கிரனுக்கு காரகம் வகிக்கிறது. வியாழனுக்கும் சுக்கிரனுக்கும் பிரச்சினை என்பதால் வியாழன் அன்று தியேட்டரில் கூட்டம் என்பது மிக குறைவாக இருந்தது. 

நீங்களே போய் பார்த்து இதனை தெரிந்துக்கொள்ளலாம். சரி நீங்கள் நினைப்பது புரிகிறது பெரிய ஆராய்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார் என்று மனதில் நினைக்கிறீர்கள்.

அடுத்த தகவலை தருகிறேன். 

எவ்வளவு பகுத்தறிவாதியும் வெள்ளிக்கிழமை அன்று தான் படத்தை வெளியீடு செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரனுக்கு உகந்த நாள் அல்லவா. நீங்களே பாருங்கள் வெள்ளிக்கிழமை அன்று தான் படம் ரிலிசாகும்.  

டைரக்டர் பற்றி சொல்லியாக வேண்டும். இவர்களுக்கு இந்த எண்ணம் வருவதற்க்கே சுக்கிரன் தான் காரணமாக இருப்பார். உடனே இவர்கள் வீட்டில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு கையை தூக்கி பல ஆங்கிள் பார்ப்பார்கள். அப்புறம் கதையை தேடவேண்டும் அல்லவா புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். புத்தகத்தை படிக்கும்பொழுது பகுத்தறிவு புத்தகத்தையும் சேர்த்து படித்துவிடுவார்கள். உடனே மக்கள் எல்லாம் முட்டாள் தனமாக இருக்கிறார்கள். கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் இவர்களுக்கு படம் வழியாக நல்ல கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படம் எடுக்கிறேன் என்று அழைவார்கள். 

பகுத்தறிவை அள்ளி குடிப்பது போல் முதல் படத்தை எடுப்பார்கள். படம் ஊத்திக்கொண்டுவிடும். அப்புறம் நம்மை மாதிரி சோதிடரை தேடி வந்துவிடுவார்கள். எதவாது கல் கிடைக்குமா அல்லது வேர் கிடைக்குமா ஏதாவது மந்திரம் போட்டு தாருங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சினிமா அனுபவம் தொடரும்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ரசித்துப் படித்தேன்....

rajeshsubbu said...

நன்றி நண்பரே