வணக்கம் நண்பர்களே!
இன்று என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். ஏன் என்றால் இந்த நாளில் பல வருடங்களுக்கு முன்பு எனது குருவை முதன் முதலில் சந்தித்த நாள். அதனால் இன்று குருவை சந்தித்து பேசினேன். அவரிடம் ஆசிபெற்றேன்.
ஆசி பெற்ற பிறகு உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இருந்ததால் காலையிலேயே முதல் பதிவில் சொல்லவில்லை. அவரிடம் சென்று ஆசி வாங்கிய பிறகு உங்களிடம் சொல்லவேண்டும் என்று இப்பொழுது சொன்னேன். ஒவ்வொருவருக்கும் ஆன்மீக வாழ்விற்க்கு ஒரு குரு கண்டிப்பாக தேவை. இப்பொழுது பல பேர்கள் மானசீகமாக பல பேரை குருவாக தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆன்மீகப்பயிற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். தவறு ஒன்றும் இல்லை.
குரு என்பவர் உயிருடன் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே அவரிடம் நாம் பல சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். தன்னுடைய கடைசி காலத்தில் தன் உயிரை தன் சிஷ்யனுக்கு ஒப்படைக்கிறார். அதனை கொண்டு அவன் ஆன்மீக வழியில் முன்னேற வேண்டும்.
ஒருவனுக்கு நல்வழி காட்டும் குரு என்பவர் அவன் எத்தனையோ நற்காரியங்களின் மூலம் பெற்ற ஒரு வரம்தான். அந்தக் குருவின் உபதேசங்களைக் கேட்டு, அதை மனதில் வாங்கி சிந்தித்து அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியில் சென்று தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும்.
தேவைக்கும் மேலாக வெளி விஷயங்களில் மனதைச் செலுத்தாது இருப்பதும், ஆன்மாவைத் தவிர வேறொன்றையும் நினையாது இருப்பதும் ஒன்றே. முன்னது பயிற்சியின் போது நாம் கடைப்பிடிக்கும் வழி என்றால், பின்னது நாம் அந்த வழி சென்று உணரவேண்டிய குறிக்கோள் ஆகும். தினசரி வாழ்வில் ஆன்மாவை உணரமுடியாதபடி பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் கைகூடும்.
ஒரு நல்ல குரு கிடைத்தற்க்கு நமது அம்மாவிற்க்கு தான் நன்றி சொல்லவேண்டும். ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியின் அருள் இல்லை என்றால் கண்டிப்பாக இது எல்லாம் நடந்து இருக்காது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
sir,
Date:june 1/2013
நண்பர் பாபு அவர்கள் முருகனின் மிக தீவிர பக்தர். முருகன் பெயரை சொன்னாலே அவருக்கு உடம்பில் முருக்கேறும். அவரின் ஆசை எப்படியும் முருகனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே, எனது குருநாதரிடம் கேட்டுவிட்டு அவர்க்கு அதற்க்கான பயிற்சியை தரவேண்டும்.
எப்போது ?????????????
வணக்கம் பாபு குருவிடம் தகவலை சொல்லியுள்ளேன். அவர் அனுமதி தந்தவுடன் ஆரம்பிக்கலாம். கண்டிப்பாக உங்களுக்கு அந்த வழிமுறைகள் கிடைக்கும்.
Post a Comment