வணக்கம் நண்பர்களே!
நமது உடம்பு தான் ஆலயமாக கட்டிவைத்துள்ளார்கள் அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஊனுடம்பே ஆலயம் என்றார் திருமூலர். ஆகம விதிகளும் உடம்பினை அடியோற்றியே ஆலய விதிகளை வரைமுறை செய்து இருக்கின்றன, உடம்பே ஆலயம். உயிர் தான் இறைவன். நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ளவாராய் பராபரமே என்றும் காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக என்றும் கூறப்பட்டுள்ளது,
கருவறைத் தூண்கள் -கண்கள்
சுவர்கற்கள் - எலும்புகள்
தூண்கள் -நரம்புகள்
கொடிமரம்- முதுகெலும்பில் உள்ள 32 கட்டுகள்
நாட்டிய மண்டபம் - தொடை
கோபுரங்கள் - பாதங்கள்
கர்ப்பகிரகம் - தலை
அர்த்தமண்டபம் - முகம்
அந்தரான மண்டபம்- கழுத்து
மகா மண்டபம் -வயிறு
உள்சுற்று -கோள்கள்
வெளிச்சுற்று -கைகள்
ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது தான் ஆன்மா உறையும் உயிரை தரிசனம் செய்யும் பக்குவம் ஏற்படும். நம்முள்ளே இறைவனை நாம் கண்டு கொள்வதற்கு படிக்கற்களே ஆலயங்கள்.
உணவு உடம்பு, மூச்சு உடம்பு, மன உடம்பு ,அறிவு உடம்பு, இன்ப உடம்பு ஆகிய ஐந்து உடம்பும் ஆலயத்தின் ஐந்து பிரகாரங்களாகும் மனித உடல் ஒன்றினுள் ஒன்றாக அமைந்த ஐந்து பகுதிகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த ஏழு படிகளையும் உடையது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
பதிவு அருமை
தாங்கள் சிவமே பகுதியை பாதியில் நிருதியதுக்கு காரனம் தெரியலாமோ?
இப்போது இருக்கும் காலத்தில் சிறந்த குரு கெடைப்பது அறிது, இந்த blog மூலம் ஆத்ம ஞனம் அடைய பயிர்ச்சு முரை முடிந்த அளவு கூருங்கள்.
சிவமே பகுதியில் ஆறம்பிக்கும் முன்பே முற்று புல்லி வசுடீங்க.
மேலோட்டம சொலிட்டு எமாதிடீங்க.
Post a Comment