வணக்கம் நண்பர்களே!
லக்கினாதிபதியாகிய சந்திரன் ஆறாவது வீட்டில் அமர்ந்துள்ளார். ராசி தனுசு ராசியாக இருக்கிறது. இவருக்கு சுக்கிர தசா ஆரம்பம் ஆனது முதல் எதுவும் சரியில்லை. தன்னுடைய குடும்பத்தில் பல்வேறு விரையத்தை மட்டுமே செய்துக்கொண்டு இருந்தது. சொல்லமுடியாத கஷ்டத்தை அந்த குடும்பத்திற்க்கு கொடுத்தது.
அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவமனையே இல்லம் போல் இருந்தார். அவரின் அம்மாவிற்க்கு மிகப்பெரிய அளவில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.
சுக்கிரன் விரையஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து இருந்து தசாவை நடத்தினார்.சுகஸ்தானத்திற்க்கும் அதிபதியாக சுக்கிரன் வருவதால் நல்ல சுகத்தையாவது தரும் என்று பார்த்தால் அதுவும் தரவில்லை.சுக்கிரன் சென்றுக்கொண்டிருக்கிற நட்சத்திரத்தை பாருங்கள் புனர்பூசம் வியாழனின் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார்.அந்த நட்சத்திரமும் சுக்கிரனுக்கு சரியில்லாத நட்சத்திரம். மொத்த தசாவும் சரியில்லை.
தனுசு ராசி மற்றும் மீனராசிக்கு சுக்கிரனின் தசா யோகத்தை தருவதில்லை மாறாக பிரச்சினையை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கும்.சுக்கிரன் கெடுபலனை அதிகமாக தரும். இவர்களுக்கு சுக்கிரன் தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இவருக்கு சூரியனின் தசா வந்தவுடன் இவருக்கு அனைத்தும் மாறியது. நல்ல வேலை கிடைத்தது. நல்ல வருமானம். சூரியன் இரண்டாவது வீட்டிற்க்கு அதிபதியாக வருகிறார். அதே நேரத்தில் லாபஸ்தானத்தில் அமர்ந்து தசாவை நடத்துவதால் சுயபுத்தியில் இருந்தே இவருக்கு ஏறுமுகமாக வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கிறது.
படத்தை பெரிதாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
5 comments:
வணக்கம், நான்கு மற்றும் பதினொன்றாம் அதிபதியான சுக்கிரன் பன்னிரெண்டில் மறைந்து ராகுவுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார். இதனால் இந்த ஜாதகருக்கு தசாநாதனின் பலன் கிடைக்காமல் போய்விட்டது. மேலும் நான்கில் எட்டாம் அதிபதியான சனி அமர்ந்துள்ளதால் இவரது தாயாருக்கு பெரிய ஆப்பரேஷன் செய்யவேண்டி வந்தது.
மேலும் லக்கினாதிபதியான சந்திரன் ஆறாம் இடத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கேட்டுப்போயுள்ளார். அதனால் அடுத்துவரும் சந்திர தசை இவருக்கு அனுகூலமாக இருக்காது என்பது என் கணிப்பு... சரியா ஐயா?
வணக்கம் நன்றாக பலனை கண்டறிந்துள்ளீர்கள். சந்திர தசா வரும்பொழுது நீங்கள் சொல்லுவது போல் இருக்ககூடும். நன்றி
இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதி அதனாலும் நன்மை செய்யவில்லை செவ்வாய் திசையில் இவருக்கு பெரிய அதிஷ்டம் காத்திருக்கு இது சரியா ஐயா?
இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதி அதனாலும் நன்மை செய்யாமல் இருந்திருக்கலம் செவ்வாய் திசை இவருக்கு பெரிய அதிஷ்டத்தை கொடுக்கும் சரியா ஐயா?
Sir,
Though chandran is in 6th place, if he have suya varga paral 6 or more, native ll get more benefits as he is manakaragan also. Is it right sir?
Post a Comment