வணக்கம் நண்பர்களே!
சனி பரிகாரத்தின் தொடர்ச்சி இது. காலையில் எழுதிய சனி பரிகாரத்தை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு நண்பர்கள் பேசினார்கள். நல்ல தகவல்களை கொடுத்தீர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி.
வெப்பத்தை தருகின்ற கிரகங்கள் என்று பார்த்தால் சூரியன் மற்றும் செவ்வாய் இந்த இரண்டு கிரகங்களும் சனிக்கு எதிரியாக தான் இருக்கின்றது. இதனை வைத்துக் கூட நீங்கள் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியும்.
உடலுக்கு கொடுக்கின்ற வெப்பம் தரும் உணவுகளை சேர்த்தாலே போதும். வெப்பமும் அதிகமாக போகிவிடகூடாது. அளவாக இருந்தால் போதும்.சனிக்கு முதலில் நான் சூப் பரிகாரம் சொல்லியுள்ளேன். அதனை அனைவரும் கடைபிடித்தால் போதும். அதுவும் சூடு தருகின்ற ஒரு விசயம். அசைவம் சாப்பிடாதவர்கள் காய்கறிக்கொண்டு தயாரிக்கும் சூப் வகைகளை சாப்பிடுங்கள்.
கிராமங்களில் பார்த்தால் சளி பிடிப்பவர்களுக்கு நண்டு ரசம் அல்லது நண்டு குழம்பு வைத்து கொடுப்பார்கள். சளியை போக்குவதில் இது சிறந்த விளங்ககூடிய உணவில் ஒன்று. இதுவும் சனியின் பாதிப்பில் இருந்து மீளுவதற்க்கு மிக சிறந்த ஒன்று.
ஒரு சில மூலிகையின் வேர்களை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இந்த வேர்கள் கிடைப்பது உங்களுக்கு கடினம் அதனால் இதனை தவிர்த்துவிடுங்கள்.
ஏன் இப்படிப்பட்ட பரிகாரம் எல்லாம் சொல்லுகிறேன் என்றால் இந்த அவசர உலகத்தில் நீங்கள் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது எல்லாம் நடக்ககூடிய ஒன்று கிடையாது. முடிந்தளவு நீங்கள் வீட்டிலேயே செய்யகூடிய ஒன்றை கொடுத்துள்ளேன்.
நான் கோவிலில் சென்று தான் பரிகாரம் செய்வேன் என்றால் அது உங்களின் பாடு வழக்கம் போல் ஒன்பது வாரம் நீங்கள் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள் என்று அனைவரின் போல் நானும் சொல்லிவிடுவேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
ok for vegetarians what is the parigaraham?
Post a Comment