வணக்கம் நண்பர்களே!
கடந்த சிவமே பதிவில் வெட்டவெளியைப் பற்றி சொல்லிருந்தேன் அல்லவா. வெட்டவெளி என்பது ஆகாயம் தான். சிவன் கோவில் தலைமை இடம் என்று சொன்னால் அது சிதம்பரம் தான். பெருமாள் கோவிலின் தலைமை இடம் என்று சொன்னால் ஸ்ரீரங்கம் தான். இந்த கோவில் எப்பொழுது திறக்குமோ அதன் பிறகு தான் அனைத்து கோவிலும் திறக்க வேண்டும். மூடும்போதும் அதே கணக்கு தான். ஆனால் காலமாற்றத்தால் அனைத்தையும் மாற்றிவிட்டார்கள்.
சிதம்பரம் சிவனின் தலைமை இடம் சொன்னேன் அல்லவா. சிதம்பரத்தில் உள்ள தத்துவம் என்ன என்றால் ஆகாய தத்துவம் வெட்டவெளி. தலைமையே எதனை குறிக்கிறது என்றால் வெட்டவெளி. இந்த வெட்டவெளி எந்தளவுக்கு முக்கியம் என்பதை நீங்களே புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆன்மீகத்திலும் உச்சநிலை வெட்டவெளி. எதும் அற்ற தன்மை சூன்யநிலை.
சூன்யம் என்றவுடன் பலபேர் பயந்துவிடுவார்கள். ஒன்றும் அற்ற தன்மை. இதனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் பயன் இருக்கிறது. தீயவழியில் சென்றால் கெடுதல் விளையும். உலகில் உள்ள பல சக்தி வாய்ந்த கோவில் எல்லாம் சூன்யத்தால் உருவாக்கியது தான். அந்த நிலையில் ஒரு உயிர் உருவாக்கமுடியும். இந்த உச்ச நிலையில் அகரமாகிய ஆண் தத்துவம் தெரியும் உகரமாகிய பெண் தத்துவம் தெரியும்.அகரத்தையும் உகரத்தையும் சேர்த்து மகரமாகி செயல்பட்டு ஒரு உயிரை உருவாக்க முடியும். இந்த கலை தான் சாகாகலை என்று சொல்லுவார்கள்.
சாமியாரை சந்தித்தால் குழந்தை பிறக்கும் சொல்லுவது எல்லாம் இந்த வகையில் உருவாக்குவது தான் ஆனால் இந்த காலத்தி்ல் போலிகள் அதிகம் என்பதால் இதில் பிரச்சினை வந்துவிட்டது. சாமியார் குழந்தை கொடுத்தார் என்பது உயிர் கொடுப்பது தான். இந்த முறையில் ஒரு குழந்தைக்கான உயிரை கொடுப்பது. பஞ்சபூதங்களில் மூன்று பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தினால் உயிர் உருவாக்கும் ஆற்றல் ஒரு மனிதனுக்கு வரும்.
மனிதன் வெட்டவெளியில் இருந்து தான் அனைத்தையும் பெறுகிறான். சாப்பிடுகின்ற சாப்பாடு முதல் அனைத்தையும் வெட்டவெளியில் இருந்து தான் பெறுகிறான். வெட்டவெளியில் நின்றுக்கொண்டு அனைத்தையும் பெறும்பொழுது இந்த வெட்டவெளி எவ்வளவு முக்கியதுவம் நிறைந்து என்று நீங்கள் சிறிது தனியாக அமர்ந்து சிந்தித்து பார்த்தால் தெரியும். இதனை நீ்ங்கள் சிந்திக்கும்போது மட்டுமே உங்களால் சிவத்தை சுவாசிக்க முடியும்.
நமக்கு தேவையானதை எல்லாம் நமக்கு யாரோ கொடுக்கிறார்கள் என்று தோன்றும். அந்த யாரோ தான் கடவுள் என்று சொல்லுகிறார்கள். அனைத்தையும் வெட்டவெளி கொடுக்கும்போது இந்த வெட்டவெளியை இயக்குவது ஒரு சக்தி இருக்கிறது அது இந்து என்றால் சிவன் என்கிறார்கள் கிருஷ்து இயேசு என்கிறார்கள் முஸ்லிம் அல்லா என்கிறார்கள்.
ஏதோ ஒரு பெயர். உண்மையான பெயர் வெட்டவெளி (சூன்யம்).நமக்கு சிவன். சிவன் தத்துவங்கள் ஆராயும்போது அதிகமான தத்துவங்கள் இருக்கின்றன. அந்த தத்துவங்களை தான் உங்களுக்கு தரபோகிறேன்.
உங்களுக்கு முடிவு என்பது இல்லை வெட்டவெளியில் கலக்கபோகிறீர்கள். நீங்கள் எந்த வழியில் வெட்டவெளியில் கலக்கமுடியும் என்பதை காட்டுவதே ஆன்மீகம். ஆன்மீகம் எந்த வழியை காட்டுகிறது என்பதை பார்க்கலாமா
வெட்டவெளியில் கலப்பதற்க்கு இரண்டு நிலை முக்கியநிலையாக கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த இரண்டு நிலை என்பது எனக்கு தெரிந்து நிலையை வைத்து உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம் அதனை பதிவுகளில் எழுதுகிறேன். ஆன்மிகத்தில் ஒன்று பிரம்மசரிய நிலையில் வெட்டவெளியில் கலப்பது அடுத்தது இல்லறவழியில் வெட்டவெளியில் கலப்பது.
பிரம்மசரியும் என்றால் நான் சாமியார் என்று வைத்துக்கொண்டேன். இப்பொழுது சாமியார்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது. நான் சாமியார் என்று உபயோகப்படுத்தினேன் என்றால் இல்லறவாழ்வில் ஈடுபடாதவர் என்று எடுத்துக்கொள்ளுங்கள். சிவத்தில் கலப்பதற்க்கு சாமியார் என்ன செய்கிறார்கள் என்றால் தன்னுடைய வாழ்க்கையை மரணத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று மரணவாயில் எனப்படும் சுடுகாட்டில் இருந்து துவங்குகிறார்கள். சம்சாரி இல்லறத்தில் இருந்து துவங்குகிறார்கள்.
சாமியார்கள் சொல்லுவது என்ன என்றால் நீ இல்லறத்தில் இருந்தால் உனக்கு கர்மவினை கூடுமே தவிர உன்னால் சிவதை அடையமுடியாது என்கிறார்கள். காமத்தால் சிவனை அடையமுடியாது என்று சொல்லுகிறார்கள். காமம் வரும்போது பற்று அங்குவந்துவிடும் உன் மனம் சிவனை நினைக்காமல் மாயையில் விழுந்து உன் மனைவி உன் பிள்ளை உன் ஊர் உன் மக்கள் என்று பற்றுதலுடன் நீ வாழ ஆரம்பித்துவிட்டால் கர்மாவின் வினை தான் உன்னை பிடிக்குமே தவிர சிவனை நீ பிடிக்கமுடியாது என்கிறார்கள்.
காமம் தான் பெரிய பிரச்சினை. காமத்தால் கர்மம் வருகிறது என்ற சொல்லுகிறார்கள் உண்மையில் காமத்தால் கர்மம் வருகிறதா என்று பார்க்கலாம். இந்த உலகத்தில் உள்ள பிரச்சினைக்கு காரணம் என்ன என்றால் காமம் தான் காரணமாக இருக்கமுடியும். எப்படி என்கிறீர்களா?
அடுத்த சிவமே பதிவில் சொல்லுகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
////////அனைத்தையும் வெட்டவெளி கொடுக்கும்போது இந்த வெட்டவெளியை இயக்குவது ஒரு சக்தி இருக்கிறது அது இந்து என்றால் சிவன் என்கிறார்கள் கிருஷ்து இயேசு என்கிறார்கள் முஸ்லிம் அல்லா என்கிறார்கள்.
ஏதோ ஒரு பெயர். உண்மையான பெயர் வெட்டவெளி (சூன்யம்).நமக்கு சிவன். /////////
வெட்ட வெளி சிவமா ? வெட்ட வெளியை இயக்கும் சக்தி சிவமா ?
வெட்ட வெளியை இயக்கும் சக்தி சிவம் என்ரால் ....வெட்ட வெளி தான் எங்கும் உள்ளதே ...அதை ஒரு சக்தி இயக்க முடியும் என்றால் அந்த சக்திக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது.............
அல்லது வெட்டவெளியே சுயம்பு (சிவம்) வா ??
என் அனுபவத்தில் குண்டலினி சக்தி மேல் ஏறி சுயம்புவான வெட்டவெளியில் கரைந்து காணமல் போகிறது ...........
நான் அந்த அனுபவத்தை முழுமை யாக பெறவில்லை என்பதால் கேக்கிறேன் ?
Post a Comment