Followers

Monday, April 8, 2013

பூர்வ புண்ணியம் 50



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வபுண்ணியத்தில் ஒவ்வொரு கிரகமும் ஐந்தில் அமர்ந்தால் முன்ஜென்மத்தில் என்ன பாவங்களை செய்திருப்பார்கள் என்று பார்த்து வந்தோம். இனி கேது  ஐந்தில் அமர்ந்தால் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

கேது ஐந்தில் அமரும்போது பித்ருதோஷம் எனவும் அழைப்பார்கள். கேது ஐந்தில் அமரும்போது நானும் அடுத்தவர்களுக்கு குறைந்தவன் இல்லை என்று முடிந்தளவுக்கு கஷ்டத்தை தரும். கேது ஞானக்காரகன் அல்லவா. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு பாவத்தை செய்திருப்பார்கள். 

ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு தீங்கு செய்திருப்பதால் இந்த ஜென்மத்தில் உங்களை ஆன்மீகத்தில் ஈடுபட்டு அலையவைக்கும். நீங்கள் குடி இருப்பது கோவிலாக கூட இருக்கலாம. வீட்டில் இரு்ப்பதை விட கோவில் தான் அதிகமாக இருப்பார்கள். கேது ஐந்தில் இருக்கும் போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை இறைவன் கொடுத்திருக்கிறார் என்று தான் அர்த்தம். ஏன் என்றால் பக்தியில் நன்றாக ஒருவன் ஈடுபடும்போது அவன் இந்த பிறவி கடலில் இருந்து விடுபடலாம் என்று சொல்லுவார்கள்.

கேது ஞானக்காரகன் என்று சொல்லுகிறோம் அல்லவா. ஞானக்காரனாகிய கேது பக்தியை காட்டும் ஐந்தில் இருக்கும்போது நீங்கள் இறைவனிடத்தில் பக்தியை காட்டுவீர்கள். இறைவன் உங்களை இக்கரையிருந்து மறுகரைக்கு உங்களை அழைத்துக்கொண்டு செல்வார். இக்கரை என்பது இல்லறவாழ்வு அக்கரை என்பது மோட்சம்.

இறைவன் படகு போல் இருந்துக்கொண்டு உங்களை கரைச்சேர்ப்பார். கடவுளுக்கு படகு என்ற ஒரு பெயர் உண்டு பெருமாளை கும்பிடுபவர்களுக்கு இது தெரியும். விஷ்ணு போதம் என்று சொல்லுவார்கள். போதம் என்றால் படகு என்று அர்த்தம்.  கடவுள் படகுபோல் இருந்து உங்களை கரைச்சேர்க்கிறார். கேது ஞானக்காரகன் என்பதால் உங்களுக்கு மோட்சத்தை கொடுக்கும் வாய்ப்பை ஐந்தில் இருந்து கொடுப்பார். நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் கடவுளிடம் செல்லலாம்.இனி வரும் பதிவுகளில் கேது ஐந்தில் நின்றால் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பீர்கள் என்பதை பார்க்கலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: