Followers

Saturday, April 6, 2013

வாழ்வியல் சாஸ்திரங்கள்



வணக்கம் நண்பர்களே !
                     மானிடனுக்குரிய எளிய வாழ்வியல் சாஸ்திரங்கள் என்ற ஒரு புத்தகத்தை படித்தேன். இப்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் இருந்தாலும் இந்த புத்தகம் நண்பர் ஒருவர் கொடுத்தார். தேடி வருவதை ஏன் தவிர்ப்போம் என்று அதனை படித்தேன். படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. இறைவனை எங்கு சென்று வழிபடுதல் சிறப்பை தரும்?

இறைவனுடைய திருவருளைப் பெற திருக்கோவில்களில் சென்று வழிபடுதல் சிறப்பை தரும். 

2. திருக்கோவிலுக்கு எவ்வாறு செல்லுதல் வேண்டும்?

 குளித்து தூய்மையான ஆடை அணிந்து திருநீரு அணிந்து திருமுறைகளை ஓதி இறைச்சிந்தனையுடன் செல்ல வேண்டும்.

3. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்ற உடன் என்ன செய்தல் வேண்டும்?

முதலில் திருக்கோபுரத்தை வழிபட்டு இரண்டு கைகளையும் தலைமீது குவித்து இறைவனின் புகழைப்பாடிக் கொண்டே உள்ளே செல்லுதல் வேண்டும்.

4  திருக்கோயிலுக்கு உள்ளே சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

பலிபீடத்திற்கு முன் விழுந்து வணங்க வேண்டும்.

5.கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலும் எந்த திசையில் தலைவைத்து வணங்க வேண்டும்?

வடக்கே தலைவைத்து வணங்க வேண்டும்.

6. தெற்கு நோக்கிய திருக்கோயிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலும் எந்த திசையில் தலைவைத்து வணங்க வேண்டும்?

கிழக்கே தலைவைத்து வணங்க வேண்டும்.

7. எந்த திசைகளில் வணங்ககூடாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்குதல் கூடாது.

8.எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?

மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது ஆகிய எண்ணிக்கையில் விழுந்து வணங்க வேண்டும்.

9. திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

இரண்டு கைகளையும் தலையிலாவது மார்பிலாவது குவித்து கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்ய வேண்டும்.

10 எந்த காலத்தில் வழிபாடு செய்யகூடாது?

அபிஷேகம் அமுது படைத்தல் போன்ற காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.