வணக்கம் நண்பர்களே !
கடந்த ஆன்மீக அனுபவங்கள் தொடரில் தெய்வங்களைப் பற்றி சொல்லிருந்தேன் பல நண்பர்கள் எனக்கு போன் செய்து காளி தெய்வத்தைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னார்கள்.
காளி தேவியை ஒருவன் தன்வசப்படுத்துவது என்பது மிகப்பெரிய கஷ்டமான ஒன்று. வசப்படுத்தினாலும் நீண்ட நாட்கள் சம்பந்தப்பட்ட நபருடன் இருக்காது. ஆத்மாவின் பலம் அதிகமாக இருக்கும்போது காளியை வசப்படுத்த முடியும். ஒரு நபர் காளியை வசப்படுத்திவி்ட்டால் அவனுக்கு அந்த நாட்டு மன்னன் கூட அடிபணிந்துவிடுவான். மிகப்பெரிய சக்தியை கொண்டது. அந்த நபரை ஜெயிப்பது கடினமான ஒன்று. அவனை அழிப்பது அந்த காளி நினைத்தால் தான் முடியும்.
நீங்கள் அனைவரும் ஆன்மீகத்தில் முதல் படியை எடுத்து வைக்க நினைப்பவர்கள். முதலில் போய் ஏன் அடிவாங்கவேண்டும். படிப்படியாக சென்று உச்சத்தை தொடலாம். நைவேத்தியத்தைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்த ஒரு விசயத்தை பலரும் போன் செய்து பாராட்டினார்கள். ஒரு பழமொழி சொல்லுவார்கள் முன்னே பின்னே செத்து இருந்தால் சுடுகாட்டைப் பற்றி தெரியும் என்பார்கள். அனைத்தையும் பார்த்தால் தான் தெரியுமே தவிர. ஏதாவது புத்தகத்தை படித்து விட்டு சொன்னால் உண்மையான விசயம் தெரியாது.
நாம் மந்திரங்களை உரு ஏற்றி கடவுளை அடைய முயற்சி செய்கிறீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை கற்று அதனை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். உண்மையில் கடவுள் ஒருவனிடம் எளிதில் வரவேண்டும் என்றால் இசைகருவிக்கு தான் அவர் மனம் லயிக்கும். அங்களா பரமேஸ்வரிக்கு பம்பை அடிக்கும் ஆளிடம் வசமாகும். பம்பை அடிப்பவன் சொன்னால் உடனே அன்னை நிறைவேற்றி தருவாள். இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு இறைக்கருவி உண்டு. அந்த தெய்வத்தின் இசைக்கருவியை நாம் பயன்படுத்தினால் நாம் கேட்டதை நிறைவேற்றி வைக்கும்.
காளிக்கு இரத்தம் தான் நாம் கொடுக்க வேண்டும். தினமும் ஆட்டை வெட்டமுடியுமா?. இரத்தம் கொடுக்காமல் காளியை பூஜை செய்யமுடியும். பூஜை செய்பவனின் ஆத்மா பலம் பொருத்தியதாக இருக்க வேண்டும். கோடியில் ஒருவருக்கு அப்படிபட்ட ஆத்மாவாக இருக்கமுடியும்.
அனைவரும் காளியை எடுக்கிறேன் காலபைரவரை எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். அனைத்தையும் முழுமையாக தெரிந்தபிறகு பயிற்சியில் இறங்குவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment