Followers

Tuesday, April 2, 2013

வாஸ்து: பகுதி 1



வணக்கம் நண்பர்களே !
                    வாஸ்துசாஸ்திரத்தைப்பற்றி நான் இதுவரை எழுதவில்லை. எழுதவில்லை என்றாலும் பல நண்பர்கள் அவர் அவர்களின் வீடு கட்டும்போது பல ஆலோசனைகளை கேட்டு அறிந்துள்ளார்கள் அவர்களுக்கு சொன்ன நல்ல கருத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒரு வீட்டில் வாஸ்து குறை இருந்தால் அவர்களின் வீட்டில் நிம்மதி என்பது இருக்காது. வாஸ்து குறை இல்லாமல் உங்களின் வீட்டை கட்டும்போது திட்டமிட்டு கட்டிக்கொள்ளுங்கள். அப்படி குறை இருந்தால் உங்களின் வீட்டில் நாற்புறத்திலும் வன்னி மரத்தின் குச்சியை நாற்புறம் புதைத்துவிடுங்கள். வன்னிமரத்தின் குச்சி எப்படிபட்ட வாஸ்துகுறையும் குறைக்கும் தன்மை உடையது.

உங்களின் மனை நல்ல சக்தியுடன் இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களின் வீட்டில் நல்ல சக்தி நிலவும். அப்படி உங்களின் வீட்டில் சக்தி குறையுடன் இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் வீட்டை சுற்றிலும் காப்பர் கம்பியை வாங்கிவந்து நாற்புறத்திலும் புதைத்துவிடுங்கள். உங்களின் வீட்டுக்கு நல்ல சக்தி கிடைக்கும். எந்தவித தீயசக்திகளும் வீட்டில் உள்நுழையாது.

வீட்டில் தீயசக்திகள் வரகூடாது என்று இப்பொழுது பல கோவில்களில் எலுமிச்சை பழம் தேங்காய் விற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் உண்மை தன்மை எவ்வாறு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. அதனை வாங்கி வந்து கட்டுவதை விட நீங்களே பழத்தை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு சென்று நீங்கள் செல்லும் கோவிலில் உள்ள இறைவனின் காலடியில் வைத்து வாங்கிக்கொண்டு பயன்படுத்தி்க்கொள்ளுங்கள் இது கூட வாஸ்துகுறையை நீக்கும் தன்மை கொண்டது.

உங்களின் வீட்டில் வாஸ்துகுறை இருக்கின்றது என்றால் முடிந்தவரை வீட்டை இடித்துக்கொண்டு இருக்காமல் மாற்று ஏற்பாடு செய்து அந்த குறையை நிவர்த்திச்செய்து கொள்ளுங்கள்.

இன்று பலபேர் நன்றாக கட்டியவீட்டை வாஸ்துகுறை என்று இடித்துக்கொண்டு உள்ளார்கள். முடிந்த வரை நீங்களே வாஸ்து புத்தகத்தை வாங்கி படித்துக்கொண்டு உங்களின் வீட்டை மாற்றிக்கொள்ளுங்கள். வாஸ்து நிபுணரிடம் நீங்கள் சென்றால் முடிந்தவரை பணத்தை வாங்கிக்கொண்டு உங்களின் வீட்டை கெடுத்துவிடுவார்கள். அதனால் நீங்களே படித்துக்கொண்டு செயலில் இறங்குவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: