Followers

Wednesday, April 24, 2013

ஆன்மீக அனுபவங்கள் 85



வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் ஆன்மீகவாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் பேசும்போது அனைவரும் கேட்கிறார்கள் நாங்களும் ஆன்மீக சேவை செய்ய வேண்டும். நாங்கள் கற்ற விசயத்தை அனைவருக்கும் கற்று தரவேண்டும் என்றும் சொன்னார்கள்.

தான் கற்றதை அடுத்தவர்களுக்கு கற்று தரவேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணத்தை காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களுக்கு வழிகாட்டுதலை செய்வது என்பது மிகப்பெரிய செயல். இன்றைய காலகட்டத்தில் அடுத்தவனை கெடுப்பது தான் பல பேருக்கு முதல் வேலையாக இருக்கிறார்கள். நமது மதத்தில் உள்ள கருத்துகளை அடுத்தவர்களுக்கு சொல்லுவதற்க்கு ஆட்கள் இல்லை தான். நூறு பேர்க்கு ஒரு நபர் தேவை தான் ஆனால் லட்சம் பேருக்கு ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை.

நாம் கற்றுக்கொடுப்பது எப்பொழுதும் தவறுதலாக இருக்ககூடாது ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் தவறுதல் இருந்தால் நம் மத்த்தை இழிவுப்படுத்தல் போல் ஆகிவிடும். நாம் சொல்லுவதை நம் மதத்தில் உள்ளவர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ பிற மதத்தில் உள்ளவர்கள் நன்றாக கவனிப்பார்கள். ஒரு போதும் தவறுதலாக இருக்ககூடாது. அனைத்தையும் முதலில் நீங்கள் சுயபயிற்சி செய்து அது நடைபெறுகிறதா எனறு பார்த்த பிறகு தான் அதனை அடுத்தவர்களுக்கு நீங்கள் கற்று தரவேண்டும்.

ஒரு குருவாக மாறுவது என்பது மிகப்பெரிய கடினமான வேலை அது. அனைத்தையும் உணர்ந்த பிறகு தான் அது நடைபெறும். நான் முதலில் ஆன்மீகத்திற்க்கு வரும் போது அப்பொழுது நினைத்தேன். இதனை நம் அடுத்தவர்களுக்கு கற்று கொடுத்து நாம் குருவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்படியாக நான் அந்த ஆசையை விட்டுவிட்டேன்.

ஏன் அந்த ஆசை விட்டுவிட்டேன் என்றால் அதில் அவ்வளவு சிக்கல் உள்ளது. நமக்கு வரும் சிஷ்யன் எதனை கேட்டாலும் அவனுக்கு நாம் செய்து தரவேண்டும். சிஷ்யன் சிக்கலில் இருந்தால் அவனை காப்பாற்ற வேண்டும். சிஷ்யன் தன்னிடம் வந்து இப்படி பிரச்சினை இருக்கிறது உடனே இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என்றால் அதனை தீர்த்துவைக்க வேண்டும். அப்படி இல்லாமல் நீ கடவுளை வணங்கு உனக்கு நடக்கும் என்றால் அதற்கு நீ எதற்கு?  நான் கடவுளையே குருவாக ஏற்றுக்கொள்வேனே என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்.

குருவாக இருப்பது மிகப்பெரிய கடினம். அதனால் நீங்கள் நான் குருவாக உங்களுக்கு இருக்கமுடியாது என்று சொல்லிவிடுங்கள். எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள்.நான் இப்படி தான் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். பதிவு ஆரம்பிக்கும்போதே வணக்கம் நண்பர்களே என்று போடுவது கூட இந்த எண்ணத்தில் தான். நண்பர் என்று சொல்லிவிட்டால் ஒன்றும் பிரச்சினை வரப்போவதில்லை. நண்பன் தான்டா அவனுக்கு தெரிந்ததை சொல்லுகிறான் என்று விட்டுவிடுவார்கள்.

ஒருவனுக்கு குரு அமைவது என்பது மிகப்பெரிய ஒரு வரம். அவன் எத்தனையோ ஜென்மங்கள் பெற்ற வரத்தின் காரணமாக குரு அமைவார்கள். அந்த சிஷ்யன் அந்த குருவின்  உபதேசங்களை கேட்டு அதனை மனதில் வாங்கி சிந்தித்து அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியாக சென்று தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். 

ஆத்மாவை நீங்கள் உணரந்த பிறகே உங்களால் குரு ஆவதற்க்கு தகுதி இருக்கும். அதன் பிறகே அடுத்தவர்களுக்கு நீங்கள் போதனை செய்யமுடியும். ஆன்மீகத்தில் ஒருவர் நல்ல நிலையில் அடைவதற்க்கு 12 ஆண்டுகள் ஆகும் என்று சோதிடத்தில் கூட சொல்லியுள்ளார். குரு கிரகம் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடமாக கடந்து 12 வருடங்கள் கடக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். அப்பொழுது மட்டுமே அவனால் ஆன்மீகத்தை உணரமுடியும் என்று சொல்லியுள்ளார்கள்.

பல பேர் என்னிடம் வந்து நான் ஆன்மீகவாதி என்று சொல்லுவார்கள். நான் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறேன் என்றும் சொல்லுவார்கள். நான் அப்படியா என்று கேட்பதைவிட சரி அடுத்தது என்ன ஏது என்று கூட கேட்கமாட்டேன். காவி ருத்ராட்சம் அணிந்துவிட்டு புற அழகை அலங்கரித்துக்கொண்டு ஆன்மீகவாதிகள் போல் இருப்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள் கிடையாது.

நான் என் குருநாதரிடம் கற்ற முதல் விசயம் இது தான். ஒரு நபர் என்னை சந்திக்க வந்தால் வருபவர் யார் என்று உணர்த்தி காட்டிவிடும். நல்ல ஆத்மாக்களை பார்த்தாலே வசிகரீக்கும் ஆற்றல் இருக்கும். அப்படிபட்டவர்கள் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் உண்மையில் அவர்கள் தான் ஆன்மீகவாதிகள். அவர்களின் பார்வை நம்மீது பட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் நமது ஆத்மா அவர்களின் பக்கம் திரும்பிவிடும். அவர்களின் பார்வை நம்மீது பட்டபிறகு தான் ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறமுடியும்.

நான் தமிழ்நாட்டில் இப்படிபட்டவர்களை நான் பார்த்தது ஐந்து பேர் இருக்கலாம்.அதற்கு மேல் நான் பார்த்தது கிடையாது. உங்களின் ஆத்மாவை பரிசுத்தமாக்கிய பிறகு அடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள் என்றால் அதுவே சரியான ஆன்மீகமாக இருக்கும். நீங்கள் கற்றுக்கொடுக்ககூட தேவையில்லை நீங்கள் பார்த்தால் போதும். அந்த ஆத்மா ஆன்மீக உலகத்திற்க்கு சென்றுவிடும். என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: