Followers

Thursday, April 25, 2013

அம்மனின் லீலை



வணக்கம் நண்பர்களே!

                    இன்று சித்ராபெளர்ணமி அல்லவா. எப்பொழுதுமே காலையிலேயே பதிவை எழுதிவிடுவேன் ஆனால் நமது அம்மன் அதற்கு வழி செய்யவில்லை. ஏன் என்றால் எந்த விசேஷ நாளாக இருந்தாலும் அம்மனை மகிழ்விக்க ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும். அதோடு விஷேச நாட்களில் அம்மனும் பிஸியாக இருக்கிறது. நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று விட்டுவிடுவேன்.

அம்மனைப்பற்றி சொல்ல ஒரு செய்தி இருக்கிறது அது என்ன என்றால் நான் காலையில் தங்கியிருக்கும் அறையில் எப்பொழுதும் பூஜை செய்வேன். நான் அந்த இடத்தில் பூஜை செய்வதால் அம்மனின் சக்தி அந்த இடத்தில் நிலைக்கொண்டு இருக்கிறது. எனது அறையில் நானும் எனது நண்பரும் தங்கி இருக்கிறோம். எங்களுடைய அறைக்கு வேறு யாரையும் அனுமதிப்பது கிடையாது. எனது நண்பர்களின் நண்பர்களும் யாரும் வருவது கிடையாது. எனது நண்பர்களும் வருவது கிடையாது. 

எனது நண்பர் நான் பூஜை செய்யும் இடத்தில் தினமும் வேலைக்கு போகும் போது அவர் வணங்கிவிட்டு செல்வார். நமது அம்மன் அவருக்கு அனைத்தையும் செய்கிறது. அவர் அந்த இடத்தில் நின்று கேட்கும் அனைத்தையும் செய்து தருகிறது. அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு இடத்தில் ஒரு சக்தியை நிறுத்தும் பொழுது அந்த சக்தியை வணங்குபவர்களுக்கு அனைத்தையும் செய்கிறது.

இப்பொழுது நான் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு உதவிக்கொண்டு வருகிறேன். அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி எப்படி நீங்கள் இதனை செய்கிறீர்கள் என்று தான் கேட்கிறார்கள். ஏன் என்றால் அவர்களை நான் பார்த்தது கிடையாது. நான் இருப்பது சென்னை அடையாரில் இருக்கிறேன். நான் இங்கு அமர்ந்துக்கொண்டு எங்கோ இருப்பவர்களுக்கு வேலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அனைத்தும் அம்மனி்ன் வேலை தான். 

நாம் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு வெளி உலகத்தில் என்ன நடைபெறுகிறது. ஒரு செயலை எப்படி செய்யவேண்டும் என்று என் குருநாதர் கற்றுக்கொடுத்தார். உண்மையில் அவர் கற்றுக்கொடுக்கவில்லை. ஒரு வரி சொல்லுவார் அதனை அப்படியே செயல்படுத்தி காட்டிவிடுவேன். அவர் வார்த்தையாக சொன்னார் அதனை நான் செயலாக மாற்றிக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை.

அனைத்து செயலும் வெற்றிகரமாக நடத்திக்கொடுப்பது அம்மன் தான். அனைத்தும் அம்மனின் லீலை இன்றி வேறு ஒன்றும் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: