வணக்கம் நண்பர்களே !
பல நண்பர்கள் இப்பொழுது காயத்ரி மந்திரத்தை பயிற்சியாக எடுத்துக்கொண்டு செய்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற இறைவனை நான் தினமும் பிராத்திக்கிறேன். இதனைப் பயிற்சி பெறுபவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அனுபவங்களாக அவர்களின் பயிற்சிக்கு ஏற்றவாறு பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
பல ஆன்மீகநண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏன் காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுக்கிறாய் வேறு ஏதாவது செய்யலாமே என்றார்கள். என்னைப்பொருத்தவரை ஒரு மனிதன் ஆன்மீக உலகத்திற்க்கு நுழைய வேண்டுமானால் சிறிய சிறிய பயிற்சி வழியாக அவனை உயர்த்தவேண்டுமே தவிர ஒரே அடியாக அவனை தூக்கி நிறுத்தினால் மேலே இருந்து கீழே விழுந்துவிடுவான். அதனை நான் மனதில் நினைத்துக்கொண்டு இதனை செய்யுங்கள் என்று சொன்னேன்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த பயிற்சி செய்யும்போது புது புது அனுபவங்கள் வரலாம். சில பேருக்கு வராமல் கூட இருக்கலாம். வரும் அனுபவங்களை நன்றாக கவனித்து வாருங்கள். சிறிய அனுபவங்கள் கிடைத்தாலும் போதும். அதனை பொக்கிஷங்கள் போல் காத்த வாருங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இன்றும் நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை. எதுவும் 108 நாட்கள் சென்றால் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
தன் உள்ளிருந்து வரும் ஆன்மசக்தியால் மட்டுமே ஒருவன் தன் நிலையை உணரமுடியும் அந்த நிலையை அவன் வெளியில் சொன்னாலும் அதனைப்பற்றி சொல்ல இயலாது அதனால் உங்களுக்கு வரும் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தால் போதும் அதுவே மிக பெரிய செயல்.
உங்களின் உள்ளே நடைபெறும் செயலை அனைத்தும் கவனித்து என்னிடம் உங்களால் முடிந்தால் சொல்லலாம் அப்படி சொல்ல தெரியவில்லை என்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது தான் எனது வேலை. குருவாக இருப்பது எனது வேலை இல்லை. ஒருவன் குருவாக இருக்கவேண்டும் என்றால் அவனுக்கு பல தகுதிகள் இருக்கவேண்டும். உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வினை கொடுக்கவேண்டும்.
அப்படி பிரச்சினையை தீர்ப்பவர்களே குருவாக இருக்கமுடியும். உங்களுக்கு குருவாக யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே.எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே அது உங்களுக்கு வெற்றியை தரும். இந்த செயலும் வெற்றியை நமக்கு தரபோகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களின் தெய்வம் உங்களை தேடி வரும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment