வணக்கம் நண்பர்களே!
விருச்சிக ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் எப்படிப்பட்ட பாவத்தை செய்திருப்பார் என்பதை பார்க்கலாம். யாருக்கு இவர் பாவம் செய்திருப்பார் என்பதையும் பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மீன ராசி அதன் அதிபதி குரு.
அடையாளம்?
மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.
மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடக்கு திசையில் இருந்திருக்கும்.
எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?
மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்
இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.
மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.
நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?
மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.
மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும்.
பரிகாரம்
வியாக்கிழமை தோறும் குரு மற்றும் கேதுவை வணங்கிவாருங்கள். வியாழக்கிழமை தோறும் அரசமர விநாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்கிவாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment