வணக்கம் நண்பர்களே!
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது பூர்வபுண்ணியத்தொடரை எழுதி அதனால் இன்று கொஞ்சம் பார்க்கலாம். விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் ஒரு கருத்தை பார்த்தேன். இதனை படித்து பல வருடங்கள் சென்றுவிட்டது. ஞாபகம் வந்தது அதனால் அதனை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தேன்.
தற்பொழுது புத்தகங்களை படிப்பதை விட்டுவிட்டேன். பல நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள் புத்தகங்களை தொடர்ந்து படியுங்கள் அப்பொழுது தான் எங்களுக்கு நிறைய தகவல் கிடைக்கும் என்கிறார்கள். உண்மையில் படித்த விசயத்தை சொல்லுவதற்க்கே எனது வாழ்நாட்கள் போதா ஒன்று. புதிதாக படித்து ஒன்றும் தெரிந்துக்கொள்ள போவதில்லை. அந்த விசயத்தை இப்பொழுது பார்க்கலாம்.
முட்டாள் ஒருவன் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம். அவனது நூல் நிலையத்தில் அவை இருக்கும். ஆனால், எதனைப் படிக்க அவனுக்கு தகுதியுண்டோ அதையே தான் அவன் படிப்பான். அவனுக்குத் தகுதியை உண்டாக்குவது அவனது ‘கர்மா’.
நமது தகுதி என்ன, நம்மால் எதனை ஜீரணிக்க முடியும் என்பதை நமது கர்மா முடிவு செய்கிறது. நாம் இன்றிருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு. நாம் எப்படி ஆக வேண்டுமென்று விரும்புறோமோ அவ்வாறு நம்மை ஆக்கிக் கொள்ளுவதற்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. இன்று நாமிருக்கும் நிலை நமது பழங்காலச் செயல்களின் விளைவாக ஏற்பட்டது என்றால், அதைத் தொடர்ந்து மற்றொரு கருத்தும் வருகிறது. அதாவது நாம் வருங்காலத்தில் எப்படி மாற வேண்டுமென்றிருக்கிறோமோ, அந்த நிலையை இக்காலத்திய நமது நடவடிக்கைகளால் உண்டாக்க முடியும். ஆகவே எப்படிச் செயல்பட வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
எனது ஆயுளில் நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் கவனியுங்கள். இந்தத் தவறுகள் ஒவ்வொன்றையும் நான் செய்திராவிட்டால் நான் இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது என்பது திண்ணமாக எனக்குத் தெரியும்.
விவேகானந்தர் சொல்லியது இது. மேற்க்கொண்டும் சொல்லுகிறார். அவர் நான் செய்த தவறுக்கும் பிராயாச்சித்தம் தேடினேன் என்றும் சொன்னார். செய்த தவறுகளால் தான் நான் உருவானேன். அந்த தவறுக்கு பரிகாரம் தேடினேன் என்கிறார். தவறை செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டு வரவில்லை அந்த தவறுக்கு அவர் பரிகாரம் செய்தார்.
இப்படிபட்ட துறவியே கர்மாவின் பாவத்தை தொலைத்து வருகிறேன் என்று சொல்லுகிறார். நாம் செய்த தவறுக்கு என்ன பரிகாரத்தை நாம் தேடினோம் என்றால் பூர்வபுண்ணியம் உங்களுக்கு புரியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment