வணக்கம் நண்பர்களே!
கடந்த சிவமே பதிவில் உலகில் உள்ள பிரச்சினைக்கு காமம் காரணம் என்று சொன்னேன் அல்லவா அதனைப்பற்றி பார்க்கலாம்.
ஒரு மானிடனின் பிறப்பும் இறப்பும் பொழுது விடியட்டும் பார்க்கலாம் என்று விட்டுவைக்காது மன்னாதி மன்னனும் மண்ணிலே மடிகிறான் இவன் மண்ணில் மமதையில் வாழ்ந்த போது வாங்கிய விருதுகளையும் வீரவாள் கெடயங்களையும் வீடு வாசல விவேகமில்லாமல் சேர்த்த சொத்துக்களையும் சொந்த பந்தங்களையும் சுழலும் பூமியை தனக்கும் தன் வம்சாவழிக்கும் பட்டா செய்து முத்திரையிட்டு பதிவு காகிதப் பத்திரங்களையும் காலனிடம் காண்பித்து மனு தாக்கல் செய்ய முடியாது என்பதை நன்றாக புரிந்துக்கொண்டு தனக்கு ஒரு வாரிசை நியமிக்கவேண்டும் என்று எண்ணி திருமணபந்தத்தில் இறங்குகிறான்.
வாரிசு நியமிப்பது குடும்பத்தில் ஆரம்பித்து அரசியல் ஆன்மிகம் என்று அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை வாரிசு வேண்டும் என்பதை விரும்புகிறான். ஏன் விரும்புகிறான் என்று பார்க்கலாம்.
எனது தந்தை விவசாயி. அவரின் எண்ணம் மிகப்பெரிய பணக்காரனாகி இந்த ஊரில் ஒரு தலைவராக வாழவேண்டும் என்று எண்ணி இருப்பார். ஒன்று அவர் எண்ணம் நிறைவேறி இருந்தால் இவரின் சொத்துக்கு ஒரு வாரிசு நியமிக்கவேண்டும் என்று எண்ணிருப்பார். அல்லது இவரது எண்ணம் நிறைவேறாவில்லை என்றால் நான் தான் வாழவில்லை தான் ஆசைபட்டதை தன் மகன் வாழவேண்டும் என்று எண்ணிருப்பார்.
உண்மையில் இவர் ஏன் இப்படி நினைக்கிறார். நான் இல்லை என்றால் வேறு யாராவது இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைக்காமல் தன் மகன் இப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அங்கு தான் மானிடனின் மிகப்பெரிய ரகசியம் ஒழிந்து இருக்கிறது. தான் பார்க்காததை தன் இரத்தம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான. உண்மையில் இரத்தம் கிடையாது. விந்து தான் அது. ஒவ்வொரு மனிதனும் விந்துவை நிலைநாட்டுகிறான் (மன்னிக்கவும் சில வார்த்தைகளை அப்படியே எழுதும்போது மட்டுமே உண்மை தன்மை தெரியும் என்பதால் இந்த வார்த்தை உபயோகிக்கப்படுகிறது)
தான் வாழாத வாழ்க்கை அல்லது தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் விந்து வாழவேண்டும் என்ற சுயநலம் தான் இது. இன்றைய சமுதாயத்தை அழகாக சொல்லுவார்கள் தலைமுறையினரிடம் விட்டு விட்டுச்செல்வது. என் அப்பா அவர் வாழ்ந்த காலத்தில் யாராவது ஒருவர் எனது தந்தையை ஏதோ ஒரு காரணத்தில் சண்டை போட்டு இருக்கலாம். அப்பொழுது எதிரி நபர் பலம்வாய்ந்தவராக இருந்து இருக்கலாம். என் அப்பா நினைத்திருப்பார் மகனே இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அவனை எதிர்ப்பது சரியில்லை நாளை நீ பெரிய பலமாக ஆனபிறகு அவனை விட்டுவிடாதே என்று சொல்லிவிட்டு இறந்திருக்கலாம்.
நான் என்ன செய்திருப்பேன். நான் பலமாகி அவனை அல்லது அவனின் வாரிசை இப்பொழுது பலி தீர்த்திருப்பேன். விந்து அனைத்தையும் சுமந்து செல்கிறது.
இன்று நடக்கும் மிகப்பெரிய குற்றங்களுக்கு காரணம் இது தான். என்ன இன்று விந்து குழுவாக கூடி பலி வாங்குகிறது. ஒன்றை சிந்தித்து பாருங்கள் உங்கள் அலுவலகத்தில் இருபது பேர் வேலை செய்கிறீர்கள் இந்த இருபது பேரும் அடிப்படை என்று பார்த்தால் இருபது விந்து தான். இருபது விந்து வேலை செய்கிறது. இந்த இருபது விந்துவில் எந்த விந்து நல்ல வேலை செய்கிறதோ அந்த விந்து இந்த இருபது பேரையும் கட்டி மேய்கின்ற வேலையை செய்யபோகிறது.
இந்த இருபது விந்துக்குள்ளும் போட்டி நிலவுகிறது. வெற்றி பெற்ற விந்து என்ன செய்யும் அது அடுத்த நிலைக்கு போட்டி போட செல்லும். தோற்ற விந்து என்ன செய்யும் நமது காலத்தில் முயற்சி செய்து பார்க்கலாம் அப்படி இல்லை என்றால் என்னுடைய விந்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறது எதிர்காலத்தில் அதனை வைத்து இந்த பதவியை பிடித்துவிடலாம் என்று என்னும். இப்படி தான் அனைத்தும் தன்னுடைய வாரிசுக்கு கடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் விந்து குழுவாக மாறிக்கொண்டு எதிர்குழுவில் உள்ள விந்துவை பலிவாங்குவது. உண்மையில் பகை முதலில் சந்தித்த விந்து பல வருடங்களுக்கு முன்னால் இருக்கலாம். அந்த விந்துவின் பகை கடத்தப்பட்டு கடத்தப்பட்டு இன்று ஆலமரம்போல் நிற்கிறது.
இப்படி தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை எல்லாம் இப்படி தான் வருகிறது வரப்போகிறது. உலகத்தில் நடக்கும் போராட்டம் அனைத்துமே விந்து நடத்தும் போராட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
உலகத்தில் இத்தனை கோடி மக்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லுவோம் அல்லவா உண்மையில் பல கோடி விந்துக்கள் இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும்.
நீங்கள் நினைக்கலாம் என்ன இவர் சிவத்தைப்பற்றி எழுதபோகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஏதோ எழுதிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கலாம். அனைத்தும் சிவமே தான். மேட்டருக்கு வருகிறேன் பாருங்கள்.
இந்த உலகத்தை இல்லறத்தில் இருப்பவன் தொடர்புக்கொள்ள நினைப்பது தன்னுடைய விந்து மூலமாக தான். இந்த விந்து கர்மாவை தான் தரும் என்று சாமியார்கள் சொல்லுகிறார்கள். அதற்கு விளக்கதான் மேற்கண்ட செய்தி. உண்மையில் அவர்கள் சொல்லுவது போல் பார்த்தால் உண்மையாக தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.
இல்லறவாசி சொல்லுவது காமம் மட்டும் இல்லை என்றால் உலகத்தின் இயக்கம் நின்றுவிடும் பிறகு படைப்பது யார் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கும் நாம் பதில் சொல்லிதான் ஆகவேண்டும். மனிதன் என்ற விலங்கு தான் செய்யும் தவறுக்கு ஒரு காரணத்தை சொல்லும். அப்படி தான் இந்த செய்தியும். படையுங்கள் ஒன்றும் தவறு இல்லை. படைத்தல் ஆரம்பித்தாலே அங்கே வன்முறை வந்துவிடுகிறதே வன்முறை இல்லாமல் படைக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும். அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் நாங்கள் இல்லறத்தில் இருந்துக்கொண்டே படைத்தல் தொழில் செய்துக்கொண்டு நாங்கள் கடவுளை அடைகிறோம் என்று சொல்லுகிறீர்கள். யோகா தியானம் எல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு. இதன் மூலம் கடவுளை நாங்கள் அடைகிறோம் என்று சொல்லுகிறார்கள். உண்மையில் இவர்கள் அடைந்தார்களா?
சாமியார்கள் என்ன சொல்லுகிறார்கள் எப்பொழுது காமம் என்று வருகிறதோ அப்பொழுதே மனிதன் கர்மாவில் சிக்கிக்கொள்கிறான். காமத்தால் கடவுளை அடையமுடியாது. காமம் என்பது கர்மா தான் அதனால் நாங்கள் காமத்தை துறக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய ஆண்மையை எடுக்கிறார்கள். நான் தமிழ்நாட்டு சாமியார்களை சொல்லவில்லை நாகாஸ் அகோரி போன்றவர்கள் ஆண்மையை எடுத்துவிடுவார்கள். அதனை எடுப்பதற்க்கு என்றே தனி முறை இருக்கிறது அதனைப்பற்றி நான் சொல்லவில்லை. மிகப்பெரிய பதிவாக போய்விடும்.
தன்னுடைய ஆண்மை எடுத்துவிடுவார்கள். சிவன் சொத்து குலநாசம் என்று இது வரை நீங்கள் எதையோப்பற்றி எல்லாம் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள். சில பேர் சிவன்சொத்து திருநீர் தான் என்று கோவிலில் கொடுக்கும் திருநீரை வாங்குவது கூட கிடையாது. தன்னுடைய குலத்தை அழிப்பது தான் கர்மாவின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். அதனால் தன் குலத்தை நாசம் செய்கிறார்கள்.
சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லுவது இதனை தான். விந்து எப்படி சிவன் சொத்து என்கிறீர்களா இந்த வெட்டவெளியில் தான் விந்து கடத்தப்படுகிறது. வெட்டவெளியில் உள்ளது அனைத்தும் சிவன் சொத்து தான். தனக்கு வாரிசு என்று இருந்தால் நான் கர்மாவில் சிக்கி சிவத்தை அடைய முடியாமல் போகும் அதனால் தனக்கு வாரிசு வேண்டாம் என்று எண்ணுகிறான். அனைத்தும் சிவத்தில் தான் உள்ளது. தானே சிவமாக மாறவேண்டும் என்று நினைக்கிறான். ஒரு வீட்டில் இருப்பதற்க்கும் வீடாக மாறுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன். சிவனுள் கலந்துவிடுவது.
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment