வணக்கம் நண்பர்களே !
கடக ராசிக்கு ஐந்தில் கேது பகவான் நின்றால் முன் ஜென்மத்தில் என்ன மாதிரி பாவங்களை இவர் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கேது பகவான் அமரும் வீட்டின் பலனை தருவார்.
கடக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி சுக்கிரன்.
செவ்வாய்யின் வீடு என்பதால் இரத்த காய ஏற்படுத்திக்ககூடும்.
அடையாளம்?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.
எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்
இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு கோமா நிலையில் பல நாட்கள் கிடந்து உயிர் போயிருக்கும்.
நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும்.
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு திசையில் இருக்கும்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு திசையில் இருக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமையில் விநாயகர் மற்றும் முருகனை வணங்கிவாருங்கள். சம்பந்தப்பட்ட ஆத்மாவை நீங்கள் அடையாளம் காணமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment