வணக்கம் நண்பர்களே !
ரிஷப ராசிக்கு ஐந்தில் கேது பகவான் நின்றால் முன் ஜென்மத்தில் என்ன மாதிரி பாவங்களை இவர் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கேது பகவான் அமரும் வீட்டின் பலனை தருவார்.
ரிஷப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன்.
புதன் இரட்டை கிரகம் என்பதால் இரண்டு வேடம் போட்டுக்கொண்டு நயவஞ்சகமாக செயல்படவைப்பார். சம்பந்தபட்டவரை நயவஞ்சமாக கெடுதலை கொடுத்திருக்ககூடும்.
இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?
மாமன் மற்றம் மாமன் வழி உறவினர்கள். மற்றும் விநாயகர் மற்றும் விஷ்ணு கோவிலுக்கு சம்பந்தப்பட்டவர்கள்.
அடையாளம்?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். தாய்மொழி மற்றும் சமஸ்கிரத மொழி தெரிந்திருக்கும்.மிதமான உயரமாக இருப்பார்.இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்நதிருக்கும்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறத்தில் இருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார். தாய்மொழி மட்டும் தெரிந்திருக்கும். இவரின் வீடு வடமேற்கில் இருந்திருக்கும்.
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.தாய்மொழி தெலுங்கு பேசுவார். உயரமானவாராக இருந்திருப்பார். இவரின் வீடு தெற்கு பக்கம் இருந்திருக்கும்.
நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உடல் தலையின் பாகங்களில் தாக்கியிருக்க கூடும்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
முகத்தில் தாக்கிருக்ககூடும் மற்றும் வயிற்றில் தாக்கியிருக்ககூடும்.
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
கையை மற்றும் தோள்பட்டையில் தாக்கியிருக்ககூடும்.
நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து வடமேற்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.
பரிகாரம்
விநாயகர் மற்றும் விஷ்ணுவை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்டவரை நீங்கள் சந்திக்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment