வணக்கம்!
ஒரு மனிதன் அறுபது ஆண்டுகள் இந்த காலத்தில் வாழ்வதே பெரிய விசயம். நீங்கள் நூற்றிருபது வருடங்கள் வாழலாம் என்று சொல்லுகின்றீர்கள். அறுபது வருடங்கள் முடிந்தால் கண்டிப்பாக இதனை செய்யவேண்டுமா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார்.
சோதிடத்தில் சொல்லியுள்ளபடி ஒரு மனிதன் நூற்றிருபது வருடங்கள் வாழலாம். நமது உணவு முறை மற்றும் ஆன்மீக வழிபாடு எல்லாம் சரியாக இருந்தால் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்று தான். இதனை அனைவரும் பின்பற்றினால் கண்டிப்பாக வாழலாம்.
அறுபது வருடங்கள் வாழ்ந்து முடித்தவர்கள் கண்டிப்பாக இதனை செய்வது நல்லது. அறுபது வருடங்கள் பொருள் சார்ந்த ஒரு ஓட்டமாகவே மனிதன் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆன்மீக மார்க்கமாகவே செல்வதற்க்கு இந்த சஷ்டிப்பூர்த்தி செய்யவேண்டும்.
பொருள் சார்ந்த தேடுதல் இருக்கும்பொழுது அது நிறைய தோஷங்களை மனிதனுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கும். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்களை ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய ஒரு நிகழ்வாகவே இது இருக்கும்.
நாம் கொஞ்சம் செலவு செய்து அவர்களை ஆன்மீகவழியில் மாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். அதோடு நமக்கும் ஒரு புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும். ஆன்மீகவழியில் செல்வதற்க்கு உதவி புரிவதற்க்கு ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment