Followers

Thursday, November 2, 2017

கடமை


வணக்கம்!
          தற்பொழுது மழைக்காலம் தொடங்கிவிட்டது அதனோடு நல்ல குளிரும் நிலவும். உங்களின் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களால் இந்த குளிரை தாங்கிக்கொள்ளமுடியாது. அவர்களுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதிகளை எல்லாம் செய்துக்கொடுத்துவிடுங்கள்.

இந்த காலத்தில் நவீன உலகம் என்று சொல்லிக்கொண்டு வயதானவர்களை எல்லாம் கவனிப்பது இல்லை. வேலை வெளியில் இருக்கின்றது அதனால் அவர்களை அழைத்துக்கொண்டு சென்று நகரத்தில் வைத்துக்கொள்ளமுடியாது என்று வயதானவர்களை விட்டுவிட்டு செல்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

என்ன தான் நவீன உலகம் என்று சொன்னாலும் எல்லா மனிதனும் இறக்க தான் போகிறான் என்று எண்ணிக்கொண்டு உங்களுக்கு உள்ள கடமைகளை செய்யாமல் போய்விடாதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை நீங்கள் கவனித்தால் நீங்கள் கோவிலுக்கு செல்லவேண்டியதில்லை.

பெரியவர்களுக்கு தேவையானதை நீங்கள் செய்துக்கொடுத்தால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும் போய்விடும் என்பது உண்மையான ஒன்று. அதாவது நான் பார்த்தவரையிலும் பெரியவர்களை நன்றாக கவனித்த குடும்பங்கள் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது.

உங்களின் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இந்த குளிர்காலத்தில் சத்தான உணவுகளை கொடுத்துவிடுங்கள். நீங்களும் சத்தான உணவுகளை உண்ணுங்கள். குளிரை தாங்ககூடிய ஆடைகளை பெரியவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: